• Mar 23 2023

குணசேகரிடம் முதல் முறையாக கேள்வி கேட்ட அவரது அம்மா- ஆதிரை எடுத்த முடிவு

stella / 1 week ago

Advertisement

Listen News!


சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் முக்கியமானது தான் எதிர் நீச்சல். இந்த சீரியல் குடும்பத்தில் உள்ள இல்லத்தரசிகளை அதிக அளவில் கவர்ந்திருக்கிறது. 

இந்த சீரியலில் இன்றைய ப்ரோமோ படி, இதுவரை குணசேகரன் செய்யும் எல்லா விஷயத்திற்கும் தலையாட்டி பொம்மையாக இருந்து கொண்டிருந்த அவருடைய அம்மா இப்பொழுது அவரை எதிர்த்து கேள்வி கேட்கிறார். இதுவே குணசேகரனுக்கு விழுந்த முதல் அடியாகும்.

உனக்கு மனசு துடிக்கலையா உன்னுடைய கூடப்பிறந்த தங்கச்சி இந்த நிலைமையில் இருந்தும் நீ இவ்வளவு வீராப்பா இருக்கிறது உனக்கு சரியா என்று குணசேகரனிடம் கேள்வி கேட்கிறார். ஆனால் அதற்கு எந்தவித மனசாட்சியும் இல்லாத படி குணசேகரன், எனக்கு என் குடும்பம் மானம் தான் முக்கியம் அதைக் கொண்டு போய் எஸ் கே ஆர் குடும்பத்தில் அடமானத்தை வச்சவளுக்காக நான் துடிக்க முடியாது என்று வழக்கம் போல் தெனாவட்டாக கூறிவிட்டார்.


பின்பு ஆதிரையை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்து வீட்டிற்கு கூட்டு வருகிறார்கள். உடனே மகளை பார்த்து அவருடைய அம்மா ஏண்டி இப்படி பண்ண, எங்களையெல்லாம் பற்றி கொஞ்சம் கூட யோசிக்க மாட்டியா என்று அன்பின் உணர்வை வெளிப்படுத்துகிறார். ஆனால் அதற்கு ஆதிரை எனக்கு எதுவுமே பிடிக்கல இந்த கல்யாணம் சுத்தமா எனக்கு வேண்டவே வேண்டாம்.ஆனா நீங்க யாருமே இதை புரிஞ்சுக்க மாட்டீங்க அதனால் எனக்கு வேற வழி தெரியவில்லை என்று கூறுகிறாள். அத்துடன் நான் இப்ப கொஞ்சம் நிம்மதியா இருக்கிறேன் ஜனனி அண்ணி தான் எனக்கு இப்ப பெரிய ஆறுதலாக இருக்கிறார் என்று குணசேகரன் மற்றும் எல்லாரும் முன்னாடியும் ஆதிரை கூறுகிறார். உடனே ஜனனி, மாமியாரிடம் இது ஆதிரையோட வாழ்க்கை அதனால் அவ மனசு புரிஞ்சு நடந்துக்கணும். அது உங்களுக்கு புரியும் நினைக்கிறேன் என்று தைரியமாக பேசுகிறார்.

இதைக் கேட்ட குணசேகரன் கோபமாக எழுந்து வழக்கம் போல என்ன பேசுவாரு, ஏம்மா எனக்கு எல்லாம் தெரியும் நீ உன் வேலைய மட்டும் பாரு இது என் தங்கச்சி மற்றும் என் குடும்ப விஷயம் என்று சொல்வாரு. அதுவும் இல்லன்னா கெத்தா எழுந்திருச்சுட்டு, கோவமா கதிர் வா நம்ம வெளியில போலாம் அப்படின்னு சொல்லிட்டு கூட்டிட்டு போவாரு. இந்த மாதிரி வீம்பாக இருக்கும் குணசேகரனை சமாளித்து, ஆதிரை திருமணம் எப்படி நடக்க போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Advertisement

Advertisement

Advertisement