‘இளம் நடிகையின் மரணத்தில் மர்மம் இருக்கின்றது’- திடுக்கும் தகவலைக் கூறிய ஹவுஸ் ஓனர்

கேளராவின் காசர்கோடு என்னும் பகுதியைச் சேர்ந்த பிரபல நடிகையான சஹானா மலையாளம் மற்றும் தமிழில் சில திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். 21 வயதான இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முதல் இரவு ஜன்னல் கிரில்லில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மேலும் போலீஸார் நடிகையின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இவரது மரணம் குறித்து ஹவுஸ் ஓனர் கூறியுள்ள தகவல் மேலும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

கடந்த ஓராண்டுக்கு முன்பு கோழிக்கோடு பகுதியை சேர்ந்த சஜ்ஜாத் என்பவரை சஹானா திருமணம் செய்து கொண்டார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பரம்பில் பஸார் பகுதியில் வாடகைக்கு வீட்டிற்கு குடி பெயர்ந்துள்ளனர் சஹானாவும் சஜ்ஜாத்தும். நேற்று முன்தினம் தனது 21 வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார் சஹானா.

இந்நிலையில் அன்று இரவே வீட்டில் மர்மமான முறையில் மரணமடைந்தார் சஹானா. அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறி வரும் அவரது கணவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் பக்கத்து வீட்டுக்காரரும், அவர்கள் தங்கியிருந்த வீட்டின் ஹவுஸ் ஓனர் பல்வேறு திடுக் தகவல்களை கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் ஊடகங்களுக்கு அளித்துள்ள பேட்டியில் ஏதோ தவறு நடந்திருக்கிறது என கூறியுள்ளார். மேலும் சஹானா மூச்சு பேச்சில்லாமல் இருப்பதாகவும் எதற்குமே ரியாக்ட் செய்யவில்லை எனக் கூறி சஜ்ஜாத் உதவிக்காக கூச்சலிட்டதாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து தான் அங்கு சென்று பார்த்துபோது சஹானா சஜ்ஜாத்தின் மடியில் படுத்திருந்தார் என்றும் சஹானா எதுவும் பேசவில்லை என்றும் சஜ்ஜாத் கூறியதாக தெரிவித்துள்ளார். மேலும் எழுப்பினால் கூட எந்த அசைவும் இல்லாமல் இருந்ததால் தான் போலீஸுக்கு தகவல் தெரிவிக்கும்படி கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அங்கு வந்தா போலீஸார் அவர்களின் ஜீப்பில் தான் சஹானாவை மருத்துவ கல்லூரிக்கு கொண்டு சென்றதாகவும் வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார். மேலும் ஏதோ தவறு நடந்திருப்பதை தன்னால் யூகிக்க முடிகிறது என்றும் வீட்டின் உரிமையாளர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • சமூக ஊடகங்களில்:

RELATED ARTICLES

spot_img
spot_img

அதிகம் படித்தவை

திரை விமர்சனம்