ஆகஸ்ட் 2 ஆம் தேதி அஜித்தின் வேறமாதிரி பாடலை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாம்

199

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவர் நடிப்பில் வெளியாகும் அனைத்துத் திரைப்படங்களும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்று வருவதோடு வசூலிலும் அள்ளிக்குவித்து வருவதும் தெரிந்ததே. மேலும் இவர் நடிப்பில் இறுதியாக வெளியாகிய நேர் கொண்ட பார்வை திரைப்படமும் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

மேலும் இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடித்து வரும் படம் வலிமை. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக படத்திற்கான அப்டேட் கேட்டு ரசிகர்கள் காத்திருந்த சூழலில் சமீபத்தில் வலிமை ஃபர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகியது.

மேலும் இப் போஸ்டர் ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளது. இந்த படத்தில் இன்னும் 10 நாட்கள் படப்பிடிப்பு மட்டுமே மீதமுள்ளது. இதை முடித்து மற்ற பணிகளை முடித்து விட்டு ஆயுதப் பூஜை பண்டிகைக்கு வெளியாக உள்ளதாக சொல்லப்படுகிறது.

வலிமை திரைப்படத்தின் இந்தி டப்பிங் பணிகள் இப்போது நடைபெற்று வருகின்றன. தமிழில் வெளியாகும் அன்றே இந்தியிலும் வெளியாக உள்ளதாக சொல்லப்படுகிறது.இந்நிலையில் வேறமாதிரி எனத் தொடங்கும் பாடல் ஆகஸ்ட் 2 ஆம் தேதி ரிலிஸாக உள்ளதாம். இது அஜித் ரசிகர்களின் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.