• Apr 19 2024

பிரபல திரையரங்கு ஒன்றில் 'லவ் டுடே' செய்த மாபெரும் சாதனை... மகிழ்ச்சியின் உச்சத்தில் படக்குழு..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

சுமாரான பட்ஜெட்டில் உருவாகி சூப்பராக கோடிக்கணக்கில் ரசிகர்களைக் கவர்ந்த படம் என்றால் அது சமீபத்தில் வெளிவந்த 'லவ் டுடே' படம் தான்.

இப்படத்தை 'கோமாளி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் இயக்குநரான பிரதீப் ரங்கநாதன் இயக்கி இதில் நடித்தும் இருக்கிறார். மேலும் லவ் டுடே படத்தின் டிரைலர் வெளியானதிலிருந்து படத்தின் மீதான எதிர்பார்ப்பு குறிப்பாக டீன் ஏஜ் ரசிகர்களுக்கு அதிகரித்து வந்தது.


அதாவது செல்போன் மாறிய பிறகு அவர்களின் காதல் என்ன ஆனது என்பதே லவ் டுடே படத்தின் கதையாகும். நவம்பர் 4-ஆம் தேதி வெளியான இத்திரைப்படமானது முதல் நாளில் பெரிதாக கலெக்சன் எதுவும் இல்லை. ஆனால் பின்பு பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் கொடுத்த நல்ல விமர்சனத்தை அடுத்து, அதிகமான திரையரங்கில் படம் திரையிடப்பட்டன. 

இந்நிலையில் தற்போது இப்படமானது பாக்ஸ் ஆபிஸில் முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கே டஃப் கொடுக்கும் வகையில் வசூலில் மாஸ் காட்டி வருகிறது. ஏனெனில் இப்படத்திற்கு அதிகப்படியான வரவேற்பு கிடைத்து சில நாட்களிலேயே எதிர்பார்த்ததை விட வசூலில் சக்கபோடு போட்டு வருகின்றது. 


அந்தவகையில் ரூ. 5 கோடியில் தயாரான இப்படம் ரூ. 50 கோடிக்கு மேல் வசூல் செய்து அமோக வேட்டை நடத்தி வருகிறது. அதுமட்டுமல்லாமல் இன்னொரு முக்கியமான விடயம் என்னவெனில் இந்த வருடம் வெளியான படங்களில் பிரபல திரையரங்கான ரோஹினியில் அதிக வசூல் செய்த படங்களில் லவ் டுடே டாப் 5ல் இடம்பெற்று விட்டதாக திரையரங்க உரிமையாளர் தெரிவித்திருக்கின்றார். இதனை அறிந்ததும் படக்குழுவினர் செம குஷியில் உள்ளனராம்.

Advertisement

Advertisement

Advertisement