• Apr 23 2024

பிக் பாஸ் டைட்டிலை தட்டித் தூக்கிய போட்டியாளர்...கொண்டாடும் ரசிகர்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் இன்றோடு நிறைவு பெறுகின்றது. 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் இருந்து இதுவரை  ஜி.பி.முத்து, மெட்டிஒலி சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட், குயின்சி, ஜனனி, ராம், ஆயிஷா, தனலட்சுமி, மணிகண்டன்,ரச்சித்தா ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர்.


எனினும் தற்போது அசீம், விக்ரமன், ஷிவின் ஆகிய மூன்று பேர் மட்டும் இறுதி போட்டிக்கு தகுதி பெற்று இருந்தனர்.அதனால் தற்போது போட்டியில் இருக்கும் மூவரில் டைட்டில் யாருக்கு என்கிற பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்திருக்கிறது.


இவ்வாறுஇருக்கையில் தற்போது வந்திருக்கும் தகவல்களின்படி விக்ரமனுக்கு தான் பிக் பாஸ் 6 டைட்டில் கிடைத்து இருப்பதாக தெரிய வந்திருக்கிறது.


விக்ரமனுக்கு ஆரம்பத்தில் இருந்தே அதிகம் ஆதரவு மக்கள் மத்தியில் இருந்து வந்தது என்பது எல்லோருக்கும் தெரிந்தது தான் என்பதால், அவர் டைட்டில் ஜெயித்ததாக வந்திருக்கும் தகவலை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றார்கள். 


Advertisement

Advertisement

Advertisement