• Apr 16 2024

வாரிசு படத்தின் தமிழக உரிமையை கைப்பற்றிய நிறுவனம்.. வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் தான் 'வாரிசு'.தில் ராஜு தயாரிக்கும் இப்படம் எமோஷனல், ஆக்‌ஷன், ரொமான்ஸ் என அனைத்தும் கலந்துக் கட்டி உருவாகியிருப்பதாகக் கூறப்படுகிறது. 

இதில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.இவர்களுடன் பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், கணேஷ் வெங்கட்ராமன், ஷாம், குஷ்பு, சங்கீதா, யோகி பாபு, சம்யுக்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.


தமன் இசையில் உருவாகியுள்ள இப்படத்திலிருந்து ரஞ்சிதமே பாடல் அண்மையில் வெளிவந்து சூப்பர்ஹிட்டாகியுள்ளது.

எனினும் அடுத்ததாக இரண்டாம் பாடல் எப்போது வெளியாகும் என எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துகொண்டு இருக்கிறார்கள்.


இவ்வாறுஇருக்கையில் , வாரிசு படத்தின் தமிழக திரையரங்க உரிமையை 7 ஸ்க்ரீன் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதனை அதிகாரப்பூர்வமாக தற்போது அறிவித்துள்ளனர். 



Advertisement

Advertisement

Advertisement