• Dec 10 2022

அந்த விசயத்தில் ஒதுங்கிடு என்று எச்சரித்த பிரபலம்-கேட்காமல் ராபர்ட் செய்த விசயம்...தீயாய் பரவும் வனிதாவின் வீடியோ..!

Listen News!
Aishu / 1 month ago
image
Listen News!

 பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 9ஆம் தேதி ஆரம்பமாகி விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது.இதில் ஜி.பி.முத்து, சாந்தி, அசல் கோலார் வெளியேறிய நிலையில் ஷெரினா வெளியேறிவிட்டதாக நம்பதகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.இவ்வாறுஇருக்கையில் அசல் கோளார் -நிவாஷினி காதல் கதை முடிவுக்கு வந்த நிலையில், தற்போது ராபர்ட் மாஸ்டர் - ரச்சிதா இருவரும் ஜோடியாக வலம் வருகின்றனர்.ராபர்ட் மாஸ்டர், ரச்சிதா இருவரையும் பிக் பாஸ் போட்டியாளர்களே கலாய்த்து வரும் நிலையை தினமும் பார்க்கமுடிகிறது.

பிக் பாஸ் வீட்டில் அசல் கோளாறு - நிவாஷினியின் அட்ராசிட்டிகள் ஊர் பஞ்சாயத்தை கூட்டியது. அதன்பின்னர்  அசல் கோளாறு எவிக்சன் ஆகி பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். இப்போது அசல் கோளாறு இல்லாத குறையை ராபர்ட் மாஸ்டர் அரங்கேற்றி வருவதாக ரசிகர்கள்  கூறி வருகின்றனர். ராபர்ட் மாஸ்டருக்கும் ரச்சிதாவுக்கும் இடையேயான கெமிஸ்ட்ரியில் விரசம் இல்லையென்றாலும், சில நேரங்களில் ரசிகர்களின் விமர்சனத்துக்கும் ஆளாகின்றது.அத்தோடு  பிக் பாஸ் வீட்டின் சீனியர் ஜோடியாக இருவரும் வலம் வருகின்றனர்.

இந்த வாரம் முழுவதும் ராபர்ட் மாஸ்டர் - ரச்சிதா இடையேயான சீண்டல்கள் கொஞ்சம் அதிகரித்ததாகவே தெரிகின்றது. அத்தோடு  சாப்பிடாமல் அடம் பிடித்த ராபர்ட் மாஸ்டரை ரச்சிதா கண்டித்ததும், அதன் பின்னர் மாஸ்டர் சாப்பிட்டதும் பிக் பாஸ் வீட்டில் கலகலப்பை ஏற்படுத்தியது.  எனினும் அதேபோல், மழையில் நனைந்து கொண்டிருந்த ரச்சிதாவை ராபர்ட் மாஸ்டர் செல்லமாக திட்ட, அதற்கு ரச்சிதா கொடுத்த ரியாக்‌ஷன்களும் வைரலாகின. 


இவ்வாறுஇருக்கையில் , இதுகுறித்து ராபர்ட் மாஸ்டரின் முன்னாள் மனைவி வனிதா பேசியுள்ள வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.ராபர்ட் மாஸ்டர் - வனிதா இருவரும் விவாகரத்து பெற்றுவிட்டாலும், தொடர்ந்து நண்பர்களாக பழகி வருகின்றனர். இந்நிலையில், ராபர்ட் மாஸ்டர் - ரச்சிதா விவகாரம் குறித்து பேசியுள்ள வனிதா, "நான் முதலிலேயே ராபர்ட்டிடம் சொன்னேன், பிக் பாஸ் வீட்டிற்குள் போனால் கண்டிப்பாக இப்படியெல்லாம் நடக்கும். அத்தோடு உள்ள போனா லவ் வரும், அப்படி எதும் வந்தா தயவுசெஞ்சு ஒதுங்கி போய்டு. உனக்கு இப்போ லவ் தேவையில்லை, அப்படி நடந்தாலும் அது உனக்கு பிரச்சினை தான்" என்றேன். ஆனால், "எல்லாத்துக்கும் ஆமாம் ஆமாம் சரிதான் என கூறிவிட்டு, இப்போ என்ன பண்றார்ன்னே எனக்கு தெரியல" என தெரிவித்துள்ளார்.


அத்தோடு, "ராபர்ட் இப்படி பண்ணுவார்ன்னு நானே எதிர்பார்க்கல, என்ன செய்றோம் என்றே தெரியாம எதாவது பண்ணி இப்படி தேவையில்லாமல் ராபர்ட் மாஸ்டர் நடந்துகொண்டு வருவதாகவும்" வனிதா கூறியுள்ளார். ராபர்ட் மாஸ்டர் - ரச்சிதா பற்றி வனிதா பேசிய வீடியோ வைரலாகி வரும் நிலையில், தற்போது வெளியான பிக் பாஸ் ப்ரோமோவிலும் ஒரு சர்ச்சை எழுந்துள்ளது.


கமல் கொடுத்த நிரூபர் - செலிபிரிட்டி டாஸ்க்கில் ரச்சிதாவிடம் ஏடாகூடமாக ராபர்ட் மாஸ்டர் கேள்விக் கேட்க, அதற்கு கோபமாக ரெட் பஸ்ஸரை அழுத்துகிறார் கமல்.அத்தோடு இன்று கண்டிப்பாக ராபர்ட் மாஸ்டர் - ரச்சிதா காதல் கதை பஞ்சாயத்துக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.