• Feb 08 2023

ஷாருகானை தெரியவே தெரியாது என சொல்லிவிட்டு போன் கதைத்த பிரபலம்- மோசமாக கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்

Listen News!
stella / 2 weeks ago
image

Advertisement

Listen News!

பாலிவுட் திரையுலகில் முக்கிய நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் ஷாருகான்.இவர் நடிப்பில் உருவாகியுள்ள பதான் திரைப்படம் வருகிற ஜனவரி 25-ந் தேதி ரிலீசாக உள்ளது.சந்தோஷ் ஆனந்த் இயக்கியுள்ள இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடித்துள்ளார். அதேபோல் வில்லனாக ஜான் அபிரஹாம் நடித்திருக்கிறார். இது பான் இந்தியா படமாக ரிலீஸ் ஆக உள்ளது.

இதனிடையே பதான் படத்தில் இடம்பெறும் பாடல் காட்சி ஒன்றில் நடிகை தீபிகா படுகோனே காவி நிறத்தில் பிகினி உடை அணிந்து மிகவும் கவர்ச்சியாக நடனமாடி இருந்தார். அந்த பாடலின் வீடியோ வெளியானபோது அந்தக் காட்சி இந்துக்களின் மத உணர்வை புண்படுத்தும் வகையில் உள்ளதால் அதை நீக்கக்கோரி பல்வேறு இந்து அமைப்புகள் பதான் படத்துக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்.நேற்று அசாம் மாநிலம் கவுகாத்தியில் பதான் திரைப்படத்தை திரையிட இருந்த தியேட்டருக்குள் புகுந்த பஜ்ரங் தளம் கட்சியைச் சேர்ந்தவர்கள் அங்கிருந்த போஸ்டர்களை கிழித்தெறிந்து தீ வைத்து வன்முறையில் ஈடுபட்டனர். 


இச்சம்பவம் பரபரப்பானதை அடுத்து நேற்று மாலை செய்தியாளர்களை சந்தித்த அம்மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது.அப்போது ஷாருகான் யாருன்னே தனக்கு தெரியாது எனக்கூறி அதிர்ச்சி அளித்தார் . அவரின் இந்த பேச்சு சோசியல் மீடியாவில் பேசுபொருள் ஆனது. இந்நிலையில், தற்போது அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா போட்டுள்ள டுவிட்டர் பதிவைப் பார்த்து நெட்டிசன்கள் அவரை கடுமையாக ட்ரோல் செய்து வருகின்றனர். 

அதில், பாலிவுட் நடிகர் ஷாருகான் இன்று அதிகாலை 2 மணிக்கு எனக்கு போன் செய்து பேசினார். கவுகாத்தியில் தனது படத்தின் திரையிடலின் போது நடந்த சம்பவம் குறித்து கவலை தெரிவித்தார். அவரிடம், சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாப்பது மாநில அரசின் கடமை என்றும் இதுகுறித்து விசாரணை நடத்தி இனி இதுபோன்ற அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் பார்த்துக் கொள்வோம் என அவருக்கு உறுதியளித்தேன்” என குறிப்பிட்டிருந்தார்.


இதைப்பார்த்த நெட்டிசன்கள், நேத்து தான் ஷாருகான் யாருன்னே தெரியாதுனு சொன்னீங்க, இன்னைக்கு என்னடானா இப்படி சொல்றீங்க என்ன சார் இதெல்லாம் என கிண்டலடித்து பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement