• Mar 28 2024

விஜய் டோப்பாவுடன் நடிக்கிறாரா...? முடி உதிர்ந்ததை பற்றி உண்மையை போட்டு உடைத்த பிரபலம்...

ammu / 1 year ago

Advertisement

Listen News!

சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு ஹீரோ தளபதி விஜய். இவர் கடைசியாக நடித்த வாரிசு படம் வெற்றி பெற்றதை அடுத்து தொடர்ந்து லியோ திரைப்படத்தில் மிகவும் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் வெற்றிகரமாக முடிந்த நிலையில் இரண்டாவது கட்டப் படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது.


தற்போது விஜய்க்கு 48 வயது ஆகிறது ஆனால் பார்த்தால் கல்லூரியில் படிக்கும் பையன் போல் எனர்ஜியாக இருக்கிறார் இதுவே அவருடைய ரசிகர்களுக்கு பிடித்த ஒரு விஷயமாக உள்ளது. ரசிகர்கள் தொடர்ந்து விஜய்யை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகின்றனர் இப்படி இருந்தாலும் சில சர்ச்சைகளில் விஜய் சிக்கிக் கொள்வது வழக்கம் தானே?


அந்த வகையில் தளபதி விஜய் கடந்த சில வருடங்களாக தோப்பா முடியை வைத்துக்கொண்டு தான் படங்களில் நடிக்கிறார் என சொல்லப்படுகிறது. வாரிசு திரைப்படத்தில் கூட தளபதி விஜய் தோப்பா முடி வைத்து தான் நடிப்பதாக அஜித் ரசிகர்கள் ஒரு பக்கம் கிண்டல் செய்து வருகின்றனர் இந்த நிலையில் நடிகரும், பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன்  விஜய்யின் முடி குறித்து பேசியிருந்தார்.


இவர் பேசியது பெரும் சர்ச்சையாகி உள்ளது அதில் அவர் சொன்னது என்னவென்றால் "விஜய்க்கு தலை மூடி உதிர்ந்து விட்டது கிட்டத்தட்ட மொட்டையாகி விட்டது கடந்த ஏழு ஆண்டுகளாக விஜய் தோப்பா வைத்துக்கொண்டு தான் நடித்து வருகிறார் இதற்கு காரணம் என்னவென்றால் பல நடிகர் ரசாயனம் கலந்த கெமிக்கல் ஷாம்புகளை பயன்படுத்துகின்றனர்".


மேலும் அவர் கூறுகையில் "அப்படி பயன்படுத்துவதால் அவர்களுடைய இயற்கையான முடி வேரோடு புடுங்கி விடுகிறது இதனால் ஹீரோக்கள் பலரும் தோப்பா முடியை வைத்துக்கொண்டு தான் படங்களில் நடிக்கின்றனர். விஜய் ஒரே மாதிரியான தோப்பாவை பயன்படுத்துவதில்லை வெவ்வேறு தோப்பாக்களை பயன்படுத்துகிறார். ஆதலால் அவரின் தோற்றம் மாறிக்கொண்டே இருக்கிறது" என பயில்வான் ரங்கநாதன் கூறியிருக்கிறார்.


Advertisement

Advertisement

Advertisement