• Apr 20 2024

துணிவு படத்தின் பிசினஸ்.. தயாரிப்பாளருக்கு லாபமா? நஷ்டமா? வெளியானது முழுவிபரம்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்னள திரைப்படம் தான் துணிவு. இப்படமானது பொங்கலுக்கு வெளியாகும் என்று ஏற்கனவே அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி விட்டது. மேலும் போனி கபூர் படத்தை தயாரித்துள்ளார். 

ஜிப்ரான் இசையமைக்கும் இந்த திரைப்படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்து வருகிறார். துணிவு படத்தின் இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி உள்ள நிலையில், 3 ஆவது பாடலும் இன்று  வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் நடிகர் அஜித் குமாருடன் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜான் கொக்கென், வீரா, அமீர், சிபி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இந்நிலையில், துணிவு படத்தின் பட்ஜெட் மற்றும் முழு பிசினஸ் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தயாரிப்பாளருக்கு இப்பாடம் லாபமா? இல்லை நஷ்டமா? வாங்க பார்க்கலாம்..

அஜித் சம்பளம் - ரூ. 70 கோடி

துணிவு படத்தின் பட்ஜெட் - ரூ. 160 கோடி

துணிவு பிஸ்னஸ் ரிப்போர்ட்

தமிழ்நாடு உரிமை - ரூ. 60 கோடி

கேரளா உரிமை - ரூ. 2.50 கோடி

கர்நாடகா உரிமை - ரூ. 3.50 கோடி

ஆந்திரா - தெலுங்கானா உரிமை - ரூ. 1.50 கோடி

ஹிந்தி டப்பிங் உரிமை - ரூ. 25 கோடி

வெளிநாட்டு உரிமை - ரூ. 14 கோடி

ஆடியோ உரிமை - ரூ. 2 கோடி


நெட்ஃபிலிஸ் டிஜிட்டல் உரிமை - ரூ. 65 கோடி

கலைஞர் டிவி சாட்டிலைட் உரிமை - ரூ. 20 கோடி

முழுமையாக துணிவு படத்தின் வியாபாரம் மட்டும் - ரூ. 193.60 கோடி

இதனை வைத்து பார்க்கும் பொழுது இன்றைய தேதியில் துணிவு படத்தின் மூலம் தயாரிப்பாளருக்கு கிடைத்துள்ள லாபம் - ரூ. 33.60 கோடி 


Advertisement

Advertisement

Advertisement