• Mar 23 2023

பாரதி கண்ணம்மா சீரியல் பிரலத்திற்கு நேர்ந்த கொடூரம்...அவரே போட்டுடைத்த உண்மை -நடந்தது என்ன..?

Aishu / 2 weeks ago

Advertisement

Listen News!

தனக்கு நேர்ந்த பிரச்சனையை மனம் திறந்து பேசியுள்ளார் பாரதிகண்ணம்மா சீரியல் பிரபலம்.

ஒரு பெண் நடிக்க வந்து விட்டாலே கட்டாயம் சில அட்ஜஸ்ட்மென்ட்டுகளுக்கு சம்மதித்து தான் ஆக வேண்டும் என்பது திரை உலகில் எழுதப்படாத விதியாக அமைந்துள்ளது எனக் கூறும் அளவிற்கு பிரச்சனைகள் எழுந்துள்ளது. அந்த காலத்தில் இருந்து இப்போது வரை இந்த பிரச்சனையை பல நடிகைகளும் எதிர் கொண்டு வருகிறார்கள். இது குறித்து பாரதி கண்ணம்மா சீரியல் பிரபலம் பேசியுள்ளார்.

விஜய் டிவியில் ரசிகர்களின் வரவேற்பை பெற்ற சீரியல்களில் ஒன்றுதான் பாரதி கண்ணம்மா. பல வருடங்களாக ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியல் சமீபத்தில் தான் முடிவடைந்தது. அதை தொடர்ந்து சில நாட்கள் இடைவெளியிலேயே அதன் இரண்டாம் பாகமும் ஆரம்பமாகி தற்போது வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அதில் மது என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் ரேஷ்மா பிரசாத்.


யூடியூபின் பிரபல சேனல் மூலம் ரசிகர்களுக்கு பரிச்சயமான இவர் சினிமா வாய்ப்புகளுக்காக முயற்சி செய்தபோது பல அட்ஜஸ்ட்மென்ட் டார்ச்சர்கள் பலதையும்  அனுபவித்திருக்கிறார். அதிலும் சிறு கதாபாத்திரமாக இருந்தாலும் அதற்கு கூட அட்ஜஸ்ட்மென்ட் செய்தே ஆக வேண்டும் என்ற கண்டிஷனும் போடப்பட்டு உள்ளது.


அது குறித்து ஒரு பேட்டியில் பேசிய அவர் கேரக்டர் ரோல் உட்பட எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அட்ஜஸ்ட்மென்ட் பற்றி பேசிவிட்டு தான் கமிட் செய்கிறார்கள். நான் ஒரு ஆடிஷனுக்கு போன போது கூட என்னிடம் இது குறித்து முகத்திற்கு நேராக பேசினார்கள். ஆனால் நான் அதற்கு முடியாது என்று கூறிவிட்டேன். அதனால் எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்று கூறியுள்ளார்.

எனினும்  அடுத்தடுத்த வாய்ப்புகளும் அட்ஜஸ்ட்மென்ட் செய்தால்தான் கிடைக்கும் என்ற நிலைமையும் இருந்தது. அதனால் நான் ஆடிஷனுக்கு செல்வதையே விட்டு விட்டேன். வாய்ப்பு கிடைக்கும்போது கிடைக்கட்டும் என்று சினிமாவை விட்டு ஒதுங்கி விட்டதாகவும் அவர் கூறியுள்ளார். தற்போது சீரியலில் நடித்து வரும் அவர் அதன் மூலம் ரசிகர்களின் ஆதரவையும் பெற்றுள்ளார்.



இவர் மட்டுமல்லாமல் எத்தனையோ நடிகைகள் இது போன்ற கசப்பான அனுபவங்களை சந்தித்திருக்கிறார்கள். அது குறித்து சிலர் வெளிப்படையாக கூறினாலும் சம்பந்தப்பட்டவர்களின் பெயரை வெளியிடுவது கிடையாது.அத்தோடு  ஒரு சில நடிகைகள் மட்டுமே இது போன்ற மனிதர்களின் முகத்திரையை கிழித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகைகள் அனைவரும் தைரியமாக இதை எதிர்கொள்ள வேண்டும் என்பதுதான் ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது.


Advertisement

Advertisement

Advertisement