• Feb 02 2023

ஒரே நாளில் பல மில்லியன் பார்வையாளர்களைக் கடந்த 'துணிவு' டிரைலர்... அடேங்கப்பா அதுவும் இவ்வளவா..!

Listen News!
Prema / 1 month ago
image

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணிக் ஹீரோவாக திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித். ஏனைய முன்னணி நடிகர்களை போலவே இவருக்கும் தமிழ்நாட்டில் மட்டுமன்றி உலகம் பூராகவும் ரசிகர்கள் உண்டு. 


அஜித் நடிப்பில் எந்தப் படம் வெளியானாலும் அந்தப் படத்திற்கு அமோக வரவேற்புக் கிடைத்து வருவது வழமை. இந்நிலையில் இவரின் நடிப்பில் தற்போது 'துணிவு' திரைப்படம் தயாராகி இருக்கின்றது. இப்படமானது வருகிற பொங்கலுக்கு பிரம்மாண்டமாக வெளியாகவிருக்கின்றது.

மேலும் போனி கபூர் தயாரிக்க வினோத் இயக்க இவர்களது கூட்டணியில் அஜித் நடித்துள்ள 3வது திரைப்படம் இது. இன்னொரு முக்கிய விடயம் என்னவெனில் இப்படமானது முழுக்க முழுக்க வினோத் அவர்களின் கதையில் உருவாகி இருக்கிறது. 

இந்த படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அத்தோடு இந்த படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது. 

சமீபத்தில் 'துணிவு' படத்தின் 'சில்லா சில்லா', காசேதான் கடவுளடா' ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், படத்தின் டிரைலர் நேற்றைய தினம் வெளியானது. அந்தவகையில் தற்போது இந்த டிரைலர் ஆனது யூ டியூப்பில் 15 மில்லியன் பார்வைகளை கடந்து அதிகம் வைரலாகி வருகிறது.

Advertisement

Advertisement

Advertisement