• Apr 20 2024

அஜித், விஜய்யை மிஞ்சிய சமந்தா... ரசிகர்கள் செய்த மிகப்பெரிய விஷயம்... வைரலாகும் புகைப்படம்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் மளமளவென வளர்ந்து முன்னணி நடிகையாக உயர்ந்து நிற்பவர் தான் சமந்தா. இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்து அசத்தி வருகின்றார். 


இவர் சமீபகாலமாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களில் நடித்து வருகின்றார். அந்தவகையில் சமந்தா நடிப்பில் வருகிற 11ஆம் தேதி பிரமாண்டமாக வெளியாகவுள்ள திரைப்படம் யசோதா. இப்படத்திற்கான ப்ரோமோஷன் நிகழ்வுகள் தற்போது நடைபெற்று வருகிறது.


சமீபத்தில் அரியவகை நோயினால் பாதிக்கப்பட்ட சமந்தா தற்போது நோயில் இருந்து சற்று மீண்டு வந்துள்ள நிலையில் உடனடியாக யசோதா படத்திற்கான ப்ரோமோஷனில் கலந்துகொண்டுள்ளார். அந்த புகைப்படங்களை கூட நேற்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்திருந்தார்.


இந்நிலையில் யசோதா படத்திற்காக சமந்தா ரசிகர்கள் ஹைதராபாத்தில் சமந்தாவிற்கு மிகப்பெரிய கட்டவுட் ஒன்றை வைத்துள்ளனர். சினிமாவைப் பொறுத்தவரை வழக்கமாக முன்னணி நடிகர்களான விஜய், அஜித், மகேஷ் பாபு, ராம் சரண் உள்ளிட்ட நடிகர்களுக்கு மட்டுமே ரசிகர்கள் செய்து வந்த இந்த விஷயம் தற்போது சமந்தாவிற்கு நடந்துள்ளது. இதனால் அந்தப்புகைப்படமானது சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement

Advertisement