பிக்பாஸ் ஸ்கிரிப்டா? இசைவாணி பேட்டுடைத்த உண்மை..வைரலாகும் வீடியோ..!

1292

பிக்பாஸ் 5வது சீசன் கடந்த ஒக்டோர் ஆரம்பமாகி பார்ப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே தான் இருக்கின்றது.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நமீதா மாரிமுத்து எதிர்பாராத விதமாக திடீரென வெளியேறினார் .அவரைத் தொடர்ந்து நாடியா, அபிஷேக், சின்னப்பொண்ணு, சுருதி, மதுமிதா என வெளியேறி இருந்த நிலையில் கடந்த வாரம் இசைவாணி வெளியேறி இருந்தது அவரின் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

பிரபல பாடகியான இசைவாணி, கானா ஸ்டைலில், எளிய நடையில் ஆழமான கருத்துக்களை எளிமையாக கொண்டுசென்று சேர்ப்பதில் கவனம் ஈர்க்கும் பாடல்களைப் பாடி பிரபலமானவர். பிக்பாஸ் போட்டியாளராக இணைந்த இசைவாணி பிக்பாஸ் வீட்டிலும் தொடக்கத்தில் இப்படியான பாடல்களை பாடி வந்தார் கலக்கி வந்தவரும் கூட.

இவ்வாறு இருக்கையில் தற்போது தன்னுடைய ரசிகர்களுக்காக நேரலையில் இணைந்த இசைவாணி விரைவில் ஒரு நேரலையில் இணைய உள்ளதாகவும், அதற்கு முன்பாக தனக்கு ஓட்டுப் போட்ட ரசிகர்களுக்கு நன்றி சொல்வதற்காக வந்ததாகவும் குறிப்பிட்டு பேச தொடங்கினார்.

எனினும் அப்போது சிலர் இசைவாணி பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின் பிக்பாஸ் பார்ப்பதே இல்லை என்று கூறியதற்கு பதிலளித்த இசைவாணி, “அப்படியெல்லாம் அவசியமில்லை பிக்பாஸ் பாருங்கள்! உங்களுக்கு பிடித்தவர்களுக்கு தொடர்ந்து ஓட்டு போடுங்கள்!” என்று குறிப்பிட்டார்.

இதேபோல், தான் வெளியே வந்தது குறித்து வருத்தமடையும் ரசிகர்களுக்கு, “கவலைப்படாதீர்கள்.. ஹேப்பி ஆக இருங்கள்.. உங்கள் நம்பிக்கை வீணாகாது!” என்று தெரிவித்திருக்கிறார். பிக்பாஸ் வீட்டுக்குள் தனக்கு பிடித்த நெருங்கித் தோழியாக பாவனியை குறிப்பிட்ட இசைவாணி, பிக்பாஸ் ஸ்கிரிப்ட் செய்யப்பட்ட ஒன்றா? Fake- என்று ரசிகர் ஒருவர் கேட்டதற்கு, “பிக்பாஸ் ஸ்கிரிப்ட் எல்லாம் இல்லை!” என்று பதில் தெரிவித்தார்.