• Apr 25 2024

வாரிசு பட பிரபலத்திற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாம்- ரசிகர்களிடைய குவிந்து வரும் வாழ்த்துக்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களைத் தயாரித்து வரும் பல முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளன. இந்த வகையில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா என்னும் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருபவர் தான் தில் ராஜு. இவர் தெலுங்கு சினிமாவில் முன்னணி தயாரிப்பாளராக காணப்படுகின்றார்.

இவர் இதுவரை ஆர்யா, பத்ரா, தில், ராம ராம கிருஷ்ணா கிருஷ்ணா, பிருந்தவனம், ஓ மை பிரண்ட், நானு லோக்கல் ,ராஜா தான் கிரேட், லவ்வர் என இன்னும் பல தெலுங்கு திரைப்படங்களைத் தயாரித்திருக்கின்றார். இது தவிர தளபதி விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் வாரிசு படத்தையும் தில் ராஜு தான் தயாரித்து வருகின்றார்.

இது தவிர சங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்து வரும் படத்தையும் தில் ராஜு தான் தயாரிக்கின்றார். மேலும் இவர் அனிதா என்பவரை மணந்து ஒரு மகள் உள்ள நிலையில் அனிதா மாரடைப்பு காரணமாக 2017 இல் இறந்தார்.

அதன் பின் ராஜு கடந்த 2020 இல் தேஜஷ்வினி என்பவரை மணந்தார். இந்த நிலையில் தற்பொழுது இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement