இறுதிகட்ட படப்பிடிப்பிற்காக குற்றாலம் சென்ற “எதற்கும் துணிந்தவன்” படக்குழு- இங்கு எத்தனை நாட்கள் என்று தெரியலையே

140

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத மாஸ் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவர் நடிப்பில் வெளியாகிய பல திரைப்படங்கள் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றுள்ளது. அந்த வகையில் இவரது நடிப்பில் அண்மையில் ஓடிடி தளத்தில் வெளியாகிய சூரனைப் போற்று திரைப்படமும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதோடு வசூலிலும் அள்ளிக்குவித்தது.

மேலும் இவர் தற்பொழுது இயக்குனர் பாண்டிராஜ் இயக்கும் “எதற்கும் துணிந்தவன்” என்னும் படத்தில் நடித்து வருகின்றார். சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தை டிசம்பர் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளதால் இந்த படத்தின் ஆரம்பக்கட்டப் படப்பிடிப்பு காரைக்குடியில் 51 நாட்கள் நடைபெற்றது அதன் பின் சில நாட்கள் சென்னையில் படப்பிடிப்பு நடைபெற்றது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் தற்போது படக்குழுவினர் அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக குற்றாலம் சென்றுள்ளனர். இது இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு என்று கூறப்படுகிறது. குற்றாலத்தில் ஒரு சில நாட்கள் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்ற உடன் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெறும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்

மேலும் படக்குழுவினர் சுறுசுறுப்பாக ஒரு பக்கம் படப்பிடிப்பு இன்னொரு பக்கம் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை செய்து வருகின்றனர். அத்தோடு இந்தப்படத்தில் சூர்யாவுடன் , பிரியங்கா மோகன், சத்யராஜ், ராஜ்கிரண், சரண்யா பொன்வண்ணன், சூரி, எம்எஸ் பாஸ்கர், ஜெயப்பிரகாஷ், தேவதர்ஷினி உள்பட பலர் நடித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.