• Apr 01 2023

மீண்டும் இணையுவுள்ள கூட்டணி... விரைவில் ‘வாரிசு 2 - ஷாக்கான ரசிகர்கள்.!

Jo / 1 month ago

Advertisement

Listen News!

இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் வாரிசு. இந்த திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் 11-ஆம் தேதி வெளியான இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 

இந்த படத்தை தில் ராஜு தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்திருந்தார்.

இந்த நிலையில் வாரிசு திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய்- தில் ராஜு-  வம்சி ஆகியோரின்  கூட்டணி மீண்டும் ஒரு திரைப்படத்தில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் ரசிகர்கள் பலர் சோகத்தில் இருக்கிறார்கள்.

ஏனென்றால், வாரிசு திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றாலும் விமர்சன ரீதியாக பெரிய அளவு வெற்றி பெறவில்லை எனவே மீண்டும் வாரிசு கூட்டணி இணையவுள்ளதாக பரவும் தகவலால் சில சோகத்தில் இருக்கிறார்கள்.

விஜய் தற்போது லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தில் நடித்த பிறகு அவர் வம்சி இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக புதிய தகவல் ஒன்றை இணையத்தில் கசிந்துள்ளது. இதனால் நெட்டிசன்கள் வாரிசு 2-வா என கலாய்த்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.




Advertisement

Advertisement

Advertisement