• Mar 28 2023

நடைப்பயிற்சி செய்த வாலிபரை போலீசில் மாட்டிவிட்ட நடிகை; பாலியல் பலாத்காரம் செய்திடுவார் என்ற பயத்தில் புகார் அளித்துவிட்டாராம்!

Prema / 3 weeks ago

Advertisement

Listen News!

தெலுங்கில் பிரபலமான இளம் நடிகைகளில் ஒருவர் ஷாலு சவுராசியா. இவர் நடிப்பில் மயங்கி இவருக்கென்று தனியாக ஓர் ரசிகர் கூட்டமும் உண்டு. மேலும் இவரின் திறமையைக் கண்டு வியந்த இயக்குநர்கள் இவருக்கு பல பட வாய்ப்புக்களை அடுத்தடுத்து கொடுத்து வருகின்றனர். 


இந்நிலையில் இவர் ஐதராபாத்தில் உள்ள கே.பி.ஆர். பூங்காவில் ஒவ்வொரு நாளும் நடைபயிற்சி செய்வது வழக்கம். இவ்வாறு பூங்காவில் நடந்து செல்லும்போது ஒரு வாலிபர் விடாது பின்னாலேயே வந்து தன்னை துன்புறுத்துவதாக பூங்கா ஊழியர்களிடம் புகார் கொடுத்துள்ளார். 


இதனையடுத்து ஊழியர்கள் அந்த இளைஞரை பிடித்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதுமட்டுமல்லாது நடிகை ஷாலு சவுராசியாவும் போலீசில் புகார் ஒன்றினை அளித்தார். பின்பு அந்த வாலிபரை போலீசார் கைது செய்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று பல கோணத்தில் விசாரணை நடத்தினர். 


அப்போது அந்த வாலிபர் தான் அந்த நடிகையை பின் தொடரவில்லை என்றும், தானும் நடைபயிற்சி செய்ததாகவும் தெரிவித்தார். இதனை நம்பாத போலீசார் கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து அந்த வாலிபர் சொல்வது உண்மை என்பதை பின்னர் உறுதிப்படுத்தினர். 


இதனையடுத்து நடிகை ஷாலு தெரிவிக்கையில் "2021-ல் இதே பூங்காவில் நடைபயிற்சி சென்றபோது ஒருவர் என்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்தார். அப்போது நான் கூச்சல் போட்டதால் எனது பர்ஸ், செல்போனை மட்டும் பறித்துக்கொண்டு ஓடிவிட்டார். அந்த பயத்தில் இன்னமும் இருப்பதாலேயே நடைபயிற்சி செய்தவர் என்னை பின் தொடர்வதாக நினைத்து போலீசில் புகார் அளித்திருந்தேன்" எனக் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement