• Jun 01 2023

அந்நியன் பட நடிகை சதா லைவ் வீடியோவில் கண்ணீர்! - அப்பிடி என்னதான் நடந்துச்சு..?

Aishu / 3 weeks ago

Advertisement

Listen News!

நடிகை சதா தமிழில் ஜெயம், அந்நியன், திருப்பதி போன்ற படங்களில் நடித்து இருக்கிறார்.

அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் அவர் நடிப்பதை குறைத்துக்கொண்டு மும்பையில் செட்டில் ஆகிவிட்டார்.

இவ்வாறுஇருக்கையில்  சதா தற்போது லைவ் வீடியோவில் கண்ணீர் விட்டு இருக்கும் சம்பவம் ரசிகர்களுக்கு  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.


Earthlings Cafe என்ற பெயரில் அவர் மும்பையில் ஒரு ஹோட்டல் நடத்தி வந்தார். அத்தோடு பல வருடங்களாக கடினமாக உழைத்து அந்த cafe-ஐ அவர் பெரிய அளவில் வளர்த்து இருக்கும் நிலையில், திடீரென அந்த இடத்தின் உரிமையாளர் காலி செய்யும்படி கூறிவிட்டாராம்.

அதனால் இனி Earthlings Cafe நடத்தமுடியாது என சதா கண்ணீர் விட்டிருக்கிறார். இதனால் மூடுவதை விட வேறு இடத்திற்கு மாற்ற முயற்சி செய்யுங்கள் என ரசிகர்கள் அவருக்கு அட்வைஸ் கூறி வருகின்றனர்.  





Advertisement

Advertisement

Advertisement