சிம்புவுடன் கிசுகிசுக்கப்பட்ட நடிகையின் மனம் திறந்த பேட்டி- அப்போ இது உண்மை தானா?

278

தமிழ் சினிமாவில் தமக்கென்று ஓர் இடத்தைப் பிடித்த முன்னணி நடிகைகள் பலர் இருக்கின்றனர். இவர்களில் தாம் நடித்த சில படங்களின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்த நடிகைகளில் முக்கியமானவர் தான் நடிகை நிதி அகர்வால்.

இவர் தமிழில் சிம்பு நடிப்பில் வெளியான ஈஸ்வரன் திரைப்படத்திலும் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான பூமி படத்திலும் நடித்திருந்தார். தற்போது இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் நடிக்க உள்ள படத்தில் ஹீரோயினாக நடிக்க உள்ளார்.

இந்நிலையில் நடிகர் சிம்புவுடன் இவர் காதலில் விழுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈஸ்வரன் படத்தின் மூலம் ஏற்பட்ட நட்பின் காரணமாக அவர்கள் இருவருக்கும் திருமணம் நடக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. இப்போது சிம்புவின் சினிமா சம்மந்தப்பட்ட முடிவுகளை கூட நிதி அகர்வால்தான் எடுத்து வருவதாக சொல்லப்படுகிறது.

இந்த கிசுகிசுக்களுக்கு பதில் அளித்துள்ள நிதி அகர்வால் ‘நம்மைப் பற்றி எப்போதும் ஏதாவது எழுதப்பட்டு கொண்டுதான் இருக்கும். அதில் உண்மையும் இருக்கலாம், பொய்யும் இருக்கலாம். எது உண்மை என்று நம் பெற்றோருக்கு தெரிந்தால் போதும். மக்கள் பேசுவது எல்லாம் ஸ்கூலில் போடும் நாடகம் போன்றவை தான். நம் செய்யும் வேலைதான் அவர்களுக்கு பதில் சொல்லவேண்டும்’ எனக் கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: