• Apr 25 2024

60வயதில் பிரபல நடிகையையை 4வது திருமணம் செய்த நடிகர்..அடுத்த நாளே ஹனிமூன் பறந்த ஜோடி..அதுவும் எங்கு தெரியுமா..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் நரேஷ் பாபு... நடிகை பவித்ராவை திருமணம் செய்து ஹனிமூன் சென்றுள்ளதாக இணையத்தில் வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.

பிரபல கன்னட நடிகை பவித்ரா லோகேஷ். தமிழில் கவுரவம், வீட்ல விசேஷங்க உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இதேபோல் தெலுங்கு சினிமாவிலும் பல படங்களில் நடித்துள்ளார் .அத்தோடு பவித்ரா லோகேஷ். 44 வயதான பவித்ரா லோகேஷ் ஏற்கனவே இரண்டு முறை திருமணம் ஆகி விவாகரத்தானவர்.இவ்வாறுஇருக்கையில் பிரபல தெலுங்கு நடிகரான மகேஷ் பாபுவின் சகோதரரான நரேஷ் பாபுவும் பவித்ரா லோகேஷும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.


அத்தோடு இருவரும் டேட்டிங் செல்லும் புகைப்படங்களும் அடிக்கடி இணையத்தில் வெளியாகி  பெரும் பரபரப்பை கிளப்பி வந்தது. 60 வதயான நடிகர் நரேஷ் ஏற்கனவே மூன்று முறை திருமணம் ஆனவர். நடிகை பவித்ரா லோகேஷுடன் காதல் மலர்ந்ததை தொடர்ந்து மூன்றாவது மனைவியிடம் விவாகரத்து கேட்டு நீதிமன்றம் சென்றுள்ளார் நரேஷ் பாபு.


தனது காதலியான பவித்ரா லோகேஷுடன் புத்தாண்டை கொண்டாடிய நரேஷ் பாபு, அப்போது அவருக்கு லிப்லாக் கொடுத்த வீடியோவை பகிர்ந்து  விரைவில் திருமணம் என்று அறிவித்தார். இவ்வாறுஇருக்கையில் நரேஷ் பாபுவும் பவித்ரா லோகேஷும் திருமணம் செய்து கொண்ட வீடியோ நேற்று முன்தினம் வெளியானது. இதில் இருவரும் மாலை மாற்றிக் கொண்டனர். நரேஷ் பாபு பவித்ரா லோகேஷுக்கு முறைப்படி தாலிக்கட்டினார்.


நரேஷ் பாபு பவித்ரா லோகேஷை நான்காவது திருமணம் செய்த வீடியோ இணையத்தில் தீயாய் பரவியது. இவ்வாறுஇருக்கையில்  இருவரும் துபாயில் ஹனிமூன் கொண்டாடும் வீடியோ வெளியாகியுள்ளது. இதில் இருவரும் துபாய் வீதிகளில் கைகளை கோர்த்தப்படி ஜாலியாக நடந்து செல்கின்றனர். இதேபோல் பாலைவனத்திலும் கைகளை கோர்த்தப்படி ஒன்றாக கால் தடத்தை பதித்தப்படி ஒய்யார நடை போட்டுள்ளனர்.


அத்தோடு பவித்ரா லோகேஷ் ஹேர்கட் செய்து இளமையாக தோற்றமளிக்கிறார். இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், மனிதர் வாழ்கிறார்...  திருமண வீடியோவை வெளியிட்டார்கள் அதற்குள் துபாயில் ஹனிமூனா என கேட்டு பெருமூச்சு விட்டு வருகின்றனர். நரேஷ் பாபு - பவித்ரா லோகேஷின் ஹனிமூன் வீடியோக்களும் இணையத்தில் வைரலா கி வருகிறது.


Advertisement

Advertisement

Advertisement