இறந்த நடிகரின் புகைப்படத்தில் மகன் செய்யும் செயல்- கண்ணீர் விட்டு அழும் ரசிகர்கள்-வைரலாகி வரும் வீடியோ..!

307

ஆக்ஷன் கிங் அர்ஜுன் சகோதரியின் மகனான கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜா கடந்த ஆண்டு ஜூன் மாதம் 7ம் திகதி மாரடைப்பால் மரணம் அடைந்தார். 36 வயதில் சிரஞ்சீவி இறந்த செய்தி அறிந்த ரசிகர்களும், திரையுலகினரும் அந்த செய்தியை கேட்டதும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

மேலும் சிரஞ்சீவி இறந்தபோது அவரின் காதல் மனைவியான நடிகை மேக்னா ராஜ் 5 மாதம் கர்ப்பமாக இருந்தார். தான் தந்தையாகப் போவதாக ரசிகர்களிடம் அறிவிக்க காத்திருந்த சிரஞ்சீவி இறந்துவிட்டது மேக்னாவிற்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.

அத்தோடு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 22ம் திகதி ஆண் குழந்தையை பெற்றெடுத்தார் மேக்னா. சிரஞ்சீவியே மகன் வடிவில் வந்துவிட்டதாக குடும்பத்தார் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

தற்போதைக்கு ஜூனியர் சிரு என்று அழைக்கப்படும் அந்த குழந்தையின் புகைப்படங்கள், வீடியோக்களை தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார் மேக்னா. மேலும் அதை பார்த்துப் பார்த்து சந்தோஷப்படுகிறார்கள் சிரஞ்சீவியின் ரசிகர்கள்.

இந்நிலையில் ஜூனியர் சிரு தன் அப்பாவின் புகைப்படத்தை தொட்டுப் பார்த்து சிரித்தபோது எடுத்த காணொளியை வெளியிட்டுள்ளார் மேக்னா ராஜ்.


மேலும் அந்த காணொளியை பார்த்து ரசிகர்கள் சந்தோஷப்பட்டாலும், கண் கலங்கியுள்ளனர்.

அத்தோடு இவ்வளவு அழகான குழந்தையை பார்க்க சிரஞ்சீவி அண்ணாவுக்கு கொடுத்து வைக்கவில்லையே. அப்பாவை பார்க்கும் பாக்கியம் ஜூனியருக்கு கிடைக்காமல் போய்விட்டது என வருத்தப்படுகிறார்கள் ரசிகர்கள்.

பிற செய்திகள்:

  1. விஜய்டிவி ப்ரியங்கா உடல் நலக்குறைவால் திடீரென மருத்துவமனையில் அனுமதி-
  2. நான் ஏன் அஸ்வினுடன் பேச ஆரம்பிச்சேன் தெரியுமா? உண்மைகளை போட்டுடைக்கும் ஷிவாங்கி
  3. விஷாலுடன் குக்வித்கோமாளி பிரபலங்கள்-வைரலாகும் புகைப்படம்..! ரகசியமாக எடுக்கப்பட்டதோ..!
  4. விரைவில் ஒன்றாகச் சந்திக்கவுள்ள குக்வித் கோமாளி பிரபலங்கள் என்ன நிகழ்ச்சியில் தெரியுமா?
  5. மறுபடியும் கொரோனா எனும் கொடிய நோயால் மற்றுமொரு இயக்குநர் மரணம்..!

சமூக ஊடகங்களில்: