திடீரென ரத்து செய்யப்பட்ட ‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பு

177

இயக்குனர் மணிரத்தினத்தின் கனவுப்படமான பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

இந்நிலையில் ஒருசில காட்சிகளை படமாக்க இன்று பொள்ளாச்சியில் படப்பிடிப்பு நடக்க இருந்த நிலையில் இப்படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளருமான மணிரத்தினம் திடீரென படப்பிடிப்பை ரத்து செய்துள்ளார். காரணம் என்னவென்று இதுவரைக்கும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இரு பாகங்களாக உருவாகும் இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யாராய், த்ரிஷா. பிரகாஷ்ராஜ். ஜெயராம். சரத்குமார் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர் என்பதும் குறிப்பிடதக்கது.