• Apr 24 2024

'AK 62' இல் அஜித்திற்கு ஜோடியான 40வயது நடிகை... அட இவங்களா அது..? இவருக்கு வளர்ந்த மகள் வேற இருக்கே..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தலை சிறந்த நடிகராகப் போற்றப்படுபவர் அஜித். இதனால் தான் இவரை ரசிகர்கள் 'தல' என செல்லமாக அழைத்து வருகின்றனர். இவருக்கு தமிழ்நாட்டில் மட்டுமன்றி உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உண்டு. 

அதே போல் இவர் நடிப்பில் உருவாகும் படங்களோ ஏராளம். அந்தவகையில் அஜித் நடிப்பில் சமீபத்தில் 'துணிவு' திரைப்படம் வெளியாகி இருக்கின்றது. இப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக 'ஏகே 62' என்ற படத்தில் அஜித் நடிக்கவிருக்கிறார்.


அதாவது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. அதுமட்டுமல்லாது இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கின்றார். மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில தினங்களில் தொடங்கவுள்ளது.

அடுத்தடுத்து இப்படம் குறித்த பல தகவல்கள் வெளியாகி இருந்தாலும் இதுவரை இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கப்போவது யார் என்பது குறித்து எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை. அதாவது முதலில் நயன்தாரா என்று கூறப்பட்டது, பின் திரிஷா என தெரிவித்தனர். ஆனால், அதிகாரப்பூர்வமாக யார் இப்படத்தின் கதாநாயகி என்று இதுவரை காலமும் கூறவில்லை.


இந்நிலையில், இப்படத்தின் கதாநாயகியாக நடிகை ஐஸ்வர்யா ராய் கமிட்டாகியுள்ளதாக தற்போது தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அத்தோடு ஏறக்குறைய இப்படத்தில் ஐஸ்வர்யா ராய் நடிப்பது உறுதியாகிவிட்டது என்றும் கூறப்படுகிறது.

ஐஸ்வர்யா ராயிற்கு தற்போது வளர்ந்த மகள் ஒருவர் இருந்தும் கூட கதாநாயகியாக நடிக்க சான்ஸ் கிடைத்துள்ளமை பேரதிர்ஷ்டம் என்று தான் கூற வேண்டும்.


அதுமட்டுமல்லாது ஏற்கனவே ஐஸ்வர்யா ராய் அஜித்துடன் இணைந்து 'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்' என்ற திரைப்படத்தில் நடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து மீண்டும் இப்படத்தின் வாயிலாக இந்த ஜோடி இணைவதால் ரசிகர்கள் பலரும் மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement