• Apr 18 2024

அதெல்லாம் சரி.. படையப்பாவின் திருமண வீடியோ நீலாம்பரிக்கு எப்படி கிடைத்தது... புதுக் குண்டைத் தூக்கிப் போட்ட நெட்டிசன்...!

Prema / 11 months ago

Advertisement

Listen News!

சூப்பர் ஸ்டார் நடிப்பில் உருவாகும் எந்தப் படத்தையும் நம்மால் எளிதில் மறக்க முடியாது. அவ்வாறான படங்களில் ஒன்று தான் 'படையப்பா'. கே.எஸ்.ரவிக்குமார் இயக்கியிருந்த இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக மறைந்த நடிகை சௌந்தர்யா நடித்திருந்தார். 


அத்தோடு வில்லி ரோலில் நடிகை ரம்யா கிருஷ்ணன் நடித்திருப்பார். மேலும் இவர்களுடன் இணைந்து சிவாஜி கணேசன், லக்ஷ்மி, சித்தாரா, ராதாரவி, நாசர், மணிவண்ணன், செந்தில், அப்பாஸ், ப்ரீத்தா, அனுமோகன், ரமேஷ் கண்ணா எனப் பலரும் நடித்திருந்தனர். சூப்பர் ஹிட் படமான படையப்பா படம் வெளியாகி தற்போது 24 வருடங்கள் நிறைவடைந்து இருக்கிறது.


இந்நிலையில் ரசிகர் ஒருவர் கேட்ட கேள்வியானது சமூக வலைத்தளத்தில் படு வைரலாகி வருகின்றது. அதாவது படையப்பா படத்தில் ரஜினியின் திருமண வீடியோவை நீலாம்பரி தொடர்ந்து பார்த்துக் கொண்டே இருப்பார். இதுகுறித்து தான் அந்த கேள்வி எழுப்பப்பட்டிருக்கின்றது. 

அந்தவகையில் ரஜினியின் அந்த திருமண வீடியோ நீலாம்பரிக்கு எப்படி கிடைத்தது என நெட்டிசன் ஒருவர் கேள்வி கேட்டு இருக்கிறார்.


அதற்கு ரசிகர்கள் பலரும் பலவிதமான பதில்களை கூறி வருகின்றனர். அதில் ஒரு ரசிகர் கூறுகையில் "கே.எஸ் ரவிக்குமார் ஒன்னும் சும்மா இல்லை. அவங்க வீட்டு வேலைக்காரன் அனுமோகன் வீடியோ எடுக்கிறதை அங்கங்க சில இடங்களில் காமித்திருப்பார். அவர் மூலமாகத்தான் படையப்பா ரஜினி உடைய கல்யாண வீடியோ கிடைத்திருக்கும்" என்று பதிலளித்திருக்கின்றார்.


Advertisement

Advertisement

Advertisement