• Apr 01 2023

''நன்றி #AK அஜித்குமார் சார்''.. விலையுயர்ந்த பைக் வாங்கிய மஞ்சு வாரியர் .. அவரே வெளியிட்ட வைரல் வீடியோ இதோ!

Jo / 1 month ago

Advertisement

Listen News!

மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை மஞ்சு வாரியர்.சமீபத்தில் பொங்கலுக்கு ரிலீசான துணிவு படத்தில் கண்மணி எனும் கதாபாத்திரத்தில்  நடித்திருந்தார்.

இந்த படத்தில் நடிகர்கள் ஜான் கொக்கன், வீரா, சமுத்திரக்கனி, மகாநதி சங்கர், பிக்பாஸ் அமீர், பாவனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

துணிவு படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

இந்நிலையில் நடிகை மஞ்சு வாரியர் தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விலையுயர்ந்த BMW பைக் வாங்குவதை  வீடியோவாக வெளியிட்டுள்ளார். 

மேலும் "தைரியமாக ஒரு சிறிய படியை எடுத்து வைப்பது எப்போதும் ஒரு நல்ல இடம். நான் ஒரு நல்ல ரைடர் ஆவதற்கு முன் நீண்ட காலம் ஆகும், அதனால் நான் சாலையில் தடுமாறுவதை நீங்கள் பார்த்தால், தயவுசெய்து என்னுடன் பொறுமையாக இருங்கள் 😊🙏 என்னை போன்ற பலருக்கு உத்வேகமாக இருந்ததற்கு நன்றி #AK அஜித்குமார் சார்". என மஞ்சு வாரியர் பதிவிட்டுள்ளார்.நடிகர் அஜித் உடன் சமீபத்தில் மஞ்சு வாரியர் இமயமலை பகுதிகளில் பைக் சுற்றுப்பயணம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. 



Advertisement

Advertisement

Advertisement