• Dec 07 2022

தளபதி விஜய்க்கு பிடித்த மூன்று உணவு இதுதான்.. முக்கிய நபர் கூறிய சீக்ரெட்

Listen News!
Aishu / 1 month ago
image
Listen News!

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடததை பிடித்து முன்னணி நடிகராக திகழ்பவர் தான் நடிகர் விஜய்.இவர் நடிக்கும் படங்கள் வசூலில் பட்டையை கிளப்பி வரும்.

இவர் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு எனும் திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.இப்படம்  வருகிற 2023 பொங்கலுக்கு வெளியாகும் என அறிவித்துவிட்டனர்.

வாரிசு படத்தை தொடர்ந்து அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் விஜய் நடிக்கவுள்ளார். மேலும்  இப்படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.


இவ்வாறுஇருக்கையில் நடிகர் விஜய்க்கு பிடித்த மூன்று உணவுகள் குறித்து பிரபல நடிகர் சஞ்சீவின் மனைவியும், சீரியல் நடிகையுமான பிரீத்தி சஞ்சீவ் கூறியுள்ளார்.

விஜய்க்கு மிகவும் பிடித்தது, மட்டன் கீமா, குலாப் ஜாமுன், பிரியாணி என இந்த மூன்று உணவுகளும் பிடிக்குமாம். அத்தோடு விஜய் மற்றும் சஞ்சீவ் கல்லூரியில் இருந்தே நெருங்கிய நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.