• Mar 29 2024

போடுடா வெடிய- இசை வெளியீட்டு விழாவுக்கு செம ஸ்டைலிஷாக என்ட்ரி கொடுத்த தளபதி விஜய் - வைரலாகும் வீடியோ

stella / 1 year ago

Advertisement

Listen News!


கோலிவுட் திரையுலகில் தனக்கென அதிக ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டவர் விஜய். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான 'பீஸ்ட்' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா, கொரோனா அச்சம் காரணமாக நடைபெறாத நிலையில், தற்பொழுது இவர் நடித்து வரும் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்து வருகின்றது.

சென்னை உள் விளையாட்டு அரங்கில் மிக பிரமாண்டமாக நடைபெறும், 'வாரிசு' இசை வெளியீட்டு விழாவில்,படக்குழுவினரோடு இன்னும் பல பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர்.குறிப்பாக விஜய்யை பார்ப்பதற்காக ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள், தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, போன்ற மாநிலங்களில் இருந்து வருகை தந்துள்ளனர்.


டிக்கெட் கிடைக்கவில்லை என்றாலும் தளபதி விஜய் பார்க்க வேண்டும் என்கிற ஆசையில், ரசிகர்கள் நேரு ஸ்டேடியத்தின் முன்பு குவிந்து பலமணிநேரமாக காத்திருக்கிறார்கள். மேலும் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.


இந்த நிலையில் விளையாட்டு அரங்கிற்கு தளபதி விஜய் மாஸாக என்ட்ரி கொடுத்த வீடியோ வெளியாகியுள்ளது. தளபதியைக் கண்டதும் ரசிகர்கள் விசிலடித்து கூச்சலிட்டுள்ளனர். இது குறித்த வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதையும் காணலாம்.




Advertisement

Advertisement

Advertisement