• Apr 18 2024

ஏழை எளியவர்களை மதிக்காத விஜய்.. புலம்பும் தளபதி ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தற்போது வம்சியின் இயக்கத்தில் உருவாகி உள்ள 'வாரிசு' படத்தில் நடித்து முடித்துள்ளார். ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைத்து உள்ளார்.


ரசிகர்கள் மத்தியில் பெரியளவிலான எதிர்பார்ப்பைத் தூண்டியுள்ள இப்படமானது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் நேற்றைய தினம் இப்படத்தினுடைய இசை வெளியீட்டு விழாவானது பிரமாண்டமாக இடம்பெற்றது. அதில் விஜய் உட்பட ஏராளமான திரைப்பிரபலங்களும் கலந்து கொண்டனர்.


இந்த நிகழ்ச்சியில் உண்மையான பல விஜய் ரசிகர்கள் கலந்துக்கொள்ள முடியாமல் போய் உள்ளது. இதற்கான முக்கிய காரணம் பணம் தான். அதாவது விஜய் மக்கள் இயக்கத்தை சார்ந்தவர்கள் பணத்தை வாங்கிகொண்டு டிக்கெட்டை விற்றுள்ளனர். இதனால் பணம் இல்லாத ஏழை எளிய விஜய் ரசிகர்கள் யாரும் இந்த இசை வெளியீட்டு விழாவை பார்க்க முடியவில்லை என நொந்து சென்றனர்.

அதுமட்டுமல்லாது எப்போதுமே விஜய் எங்களை கண்டுகொள்ளவே மாட்டாரா எனவும் கூறி அங்கிருந்து வருத்தத்துடன் சென்றுள்ளனர்.  

Advertisement

Advertisement

Advertisement