• Apr 20 2024

தளபதி 67 படத்தில் கௌரவ வேடத்தில் கமிட்டாகி இருக்கும் சூப்பர் ஸ்டார்- செம ஷாக்கிங் நியூஸ்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகராக வலம் வரும் விஜய் நடிப்பில் வாரிசு என்னம் திரைப்படம் உருவாகி வருகின்றது. மிகப்பெரிய நட்சத்திரப்பட்டாளமே நடிக்கும் இப்படமானது அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று ஏற்கனவே அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருந்தது.

இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் தான் முடிவடைந்ததோடு தற்பொழுது டப்பிங் பணிகள் நடைபெற்று வருகின்றது. விரைவில் இப்படத்தின் பெஸ்ட் சிங்கிள் மற்றும் ட்ரெய்லர் என்பன வெளியாகும் என ரசிகர்களால் நம்பப்படுகின்றது.


இதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபத 67 என்னும் படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.விக்ரம்' படத்தின் சூப்பர் ஹிட் வெற்றிக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கிற இந்த படத்திற்கு இப்போதே எதிர்பார்ப்பு உருவாக ஆரம்பித்துவிட்டது. 

ஏனென்றால் இந்த படத்திலிருந்து வெளியாகும் ஒவ்வொரு தகவலும் தரமான இருக்கிறது. இந்த படத்தில் விஜய்யுடன் நான்கு வில்லன்கள் மோதவுள்ளனர். அதன்படி பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், இயக்குனர்கள் கெளதம் மேனன், மிஷ்கின், மலையாள நடிகர் நிவின் பாலி ஆகியோர் இந்த படத்தில் இணையவுள்ளனர். 

இந்நிலையில் இப்படத்தில் பாலிவுட் சூப்பர் ஷாருக்கான் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளாராம். இது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே அட்லி இயக்கத்தில் உருவாகும் 'ஜவான்' படத்தில் நடிகர் விஜய் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. 



Advertisement

Advertisement

Advertisement