• Mar 28 2023

தல அஜித்தின் ஏகே 62 பட டைட்டில் ரெடி! -பூஜையுடன் தொடங்கிய ஷூட்டிங் - செம குஷியில் ரசிகர்கள்

Jo / 1 month ago

Advertisement

Listen News!

கடந்த மாதம் பொங்கலுக்கு வெளியான அஜித்தின் துணிவு திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டாக அமைந்தது.அந்தப் படத்தில் அஜித் டார்க் டெவில் என்ற கேரக்டரில் கேங்ஸ்டராக நடித்திருந்தார்.

இந்நிலையில், தற்போது உருவாகும் ஏகே 62ல், துணிவு படத்தில் இருந்து ஒரு கனெக்ட் இருக்கும் என தகவல் கிடைத்துள்ளது.விஜய்யின் தளபதி 67 லியோ என்ற டைட்டில் அறிவிப்புடன் ஷூட்டிங் சென்றுவிட்டது. இதனையடுத்து அஜித்தின் ஏகே 62 அப்டேட் என்னவென்பதை தெரிந்துகொள்ள ரசிகர்கள் ரொம்பவே ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். 

லைகா தயாரிக்கும் இந்தப் படத்தை முதலில் விக்னேஷ் சிவன் இயக்குவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் பின்னர் தற்போது மகிழ் திருமேனி இயக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து இன்னும் அபிஸியல் அப்டேட் வெளியாகாத நிலையில், ஏகே 62 பூஜை சிம்பிளாக முடிந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையில் நடைபெற்ற ஏகே 62 பூஜையில், மகிழ் திருமேனி உள்ளிட்ட படக்குழுவினர் மட்டும் கலந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. அதேபோல் மார்ச் இரண்டாவது வாரம் டைட்டில் ப்ரோமோ வெளியானதும் ஷூட்டிங் தொடங்கிவிடும் எனவும் தகவல் கிடைத்துள்ளது. 

முக்கியமாக ஏகே 62 படத்திற்கு டெவில் என்ற தலைப்பை வைக்க முடிவு செய்துள்ளதாம் படக்குழு. துணிவு படத்தில் டார்க் டெவில் என்ற கேரக்டரில் நடித்திருந்தார் அஜித். தற்போது அந்த டெவில் என்ற பெயரையே ஏகே 62 டைட்டிலாக வைத்துவிட்டார்களாம்.

அஜித்தின் டெவில் கேரக்டர் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றதால், படக்குழு இப்படியொரு ப்ளான் செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. 

அதேநேரம் ஏகே 62 ஸ்பை த்ரில்லர் ஜானரில் உருவாகவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதனால் தான் டெவில் என்ற டைட்டில் சரியாக இருக்கும் என மகிழ் திருமேனி நினைத்துள்ளாராம். இதனையடுத்து ஏகே 62 டைட்டில் டெவில் என சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. 

மேலும், அஜித்துடன் அருண் விஜய், அதர்வா, பிக் பாஸ் கவின், ஜான் கெக்கென் ஆகியோரும் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. 

ஏகே 62 டைட்டில் ப்ரோமோ வெளியானதும் அசுர வேகத்தில் படப்பிடிப்பை நடத்திமுடிக்க உள்ளாராம் மகிழ் திருமேனி. இந்நிலையில், ஏகே 62 படத்தின் டைட்டில் டெவில் என்றே இருக்க வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement