• Apr 25 2024

துணிவு ட்ரெய்லர் வெளியாகும் நேரம்...அதிகாரப்பூர்வ அறிவிப்பால் ரசிகர்கள் கொண்டாட்டம்

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் அஜித், இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் தற்போது நடித்துள்ள திரைப்படம் 'துணிவு'. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இப்படம் வெளியாக உள்ள நிலையில், இந்த படத்தின் புரமோஷன் பணிகள் படு தீவிரமாக இடம்பெற்று வருகின்றது. உலகளவில் உள்ள அஜித் ரசிகர்களும், இந்த படத்தின் ரிலீஸுக்காக கார்த்திருக்கின்றனர். 

 எனினும் இதே நாளில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'வாரிசு' திரைப்படமும் வெளியாக உள்ள நிலையில் ரசிகர்களை தாண்டி, தயாரிப்பாளர்களே விஜய் தான் அஜித்தை விட பெரிய நடிகர், எனவே அவருடைய படத்திற்கு தான் அதிக திரையரங்குகள் ஒதுக்கப்பட வேண்டும் என கூறி வருவது, பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

 இரண்டு படக்குழுவினருமே படத்தை புரமோட் செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். விஜய்யின் போஸ்டரை 'வாரிசு' படக்குழு ரயில் போன்றவற்றில் ஒட்டி விளம்பர படுத்தினால்... அஜித்தின் துணிவு படக்குழு ஒரு படி மேலே சென்று ஆகாயத்தில், ஸ்கை டைவிங் செய்து விளம்பரப்படுத்தியது திரையுலகினரையே ஆச்சரியப்படுத்தியது.

இன்று, 'துணிவு' படத்தில் இருந்து முக்கிய தகவல்கள் வெளியாகும் என, படக்குழு அறிவித்திருந்த நிலையில், இப்படத்தில் நடித்துள்ள முக்கிய நடிகர்களின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை அடுத்தடுத்து வெளியிட்டு இருந்தது.

இந்நிலையில் தற்போது துணிவு படத்தின் ட்ரைலர் வெளியாகும் நேரம் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. நாளை டிசம்பர் 31ம் தேதி மாலை 7 மணிக்கு துணிவு ட்ரைலர் வெளியிடப்பட இருக்கிறது.

இதனால் தற்போது அஜித் ரசிகர்கள் பெரிய அளவில் கொண்டாட தொடங்கி இருக்கின்றனர்.

 

Advertisement

Advertisement

Advertisement