• Apr 18 2024

துணிவு ஜல்லிக்கட்டு காளை மாதிரி- ரசிகர்களிடம் இருந்து குவியும் டுவிட்டர் விமர்சனங்கள் இதோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

எச்.வினோத் இயக்கத்தில் அஜித்குமார், மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் தான் துணிவு .இப்படத்தை தமிழ்நாட்டில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனமும், வெளிநாடுகளில் லைகா நிறுவனமும் ரிலீஸ் செய்துள்ளது. துணிவு படத்தின் முதல் காட்சி இன்று அதிகாலை 1 மணிக்கு திரையிடப்பட்டது.

படம் பார்த்த ரசிகர்கள் தங்களது விமர்சனத்தை டுவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர். அதனை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.ஒரு வரில சொல்லனும்னா ரஜினிக்கு பாட்ஷா மாதிரி அஜித்துக்கு துணிவு. விக்ரமை விட மூன்று மடங்கு இருக்கிறது. மங்காத்தாவுக்கு பிறகு அஜித்துக்கு ஒரு மைல்கல் படமாக துணிவு இருக்கும்.


துணிவு, வங்கி கொள்ளையை மையமாக வைத்து பக்கா டுவிஸ்ட் உடன் எடுக்கப்பட்டு உள்ளது. காசைப் பற்றிய தரமான படத்தை கொடுத்துள்ளார் இயக்குநர் எச்.வினோத்.


துணிவு படத்தின் முதல் பாதியில் அஜித் வெறித்தனமாக இருந்ததாகவும், இரண்டாம் பாதி சுமார் தான் எனவும் FDFS பார்த்த நெட்டிசன் ஒருவர் பதிவிட்டுள்ளார்.

சூப்பர்ஸ்டார் ஸ்டைல் சொல்லனும்னா துண்டு ஒரு முறை தான் தவறும் எச்.வினோத் இறங்கி அடிச்சுறுக்காப்டி. சந்தேகமே வேண்டாம் துணிவு ஜல்லிக்கட்டு காளை மாதிரி பரபரப்பா நல்லா இருக்கு.


துணிவு படம் பலமான சோசியல் மெசேஜ் உடன் தரமா இருக்கு, நீண்ட நாட்களுக்கு பிறகு ஷங்கர் படம் பார்த்த மாதிரி இருக்கு. கிரெடிட் கார்டு மற்றும் வங்கியில் நடக்கும் முறைகேடுகளை பற்றி வச்சி செஞ்ட்சிட்டாங்க. மற்ற அஜித் படங்கள் போல் இல்லாமல் புதிதாக இருக்கிறது. 2-ம் பாதி ஜெனரல் ஆடியன்ஸுக்கு நன்றாக கனெக்ட் ஆகும்.


துணிவு படத்திற்கு 2-ம் பாதி சொதப்பலாக உள்ளது. பிளாஷ்பேக் மற்றும் கிளைமாக்ஸ் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம். மொத்தமாக பார்த்தால் முதல் பாதி அருமையாக உள்ளது. இரண்டாம் பாதி சுமார் தான். ஒருமுறை பார்க்கலாம்.


துணிவு கண்டிப்பாக பிளாக்பஸ்டர் தான். தல கிளைமாக்ஸ் எண்ட்ரி சீன் அப்டியே மண்டைக்குள்ள ஓடிட்டே இருக்கு. எச்.வினோத்தின் திரைக்கதையும் மேக்கிங்கும் தெறி. ஜிப்ரான் பின்னணி இசையில் தெரிக்க விட்டிருக்காப்ல.

விஷ்ணுவர்தனுக்கு அப்புறம் எச்.வினோத் தான் அஜித்தை மிகவும் ஸ்டைலிஷாக காட்டி உள்ளார். அஜித்தின் சமீபத்திய படங்களில் சிறந்த திரைக்கதை உள்ள படமாக இது உள்ளது. கண்டிப்பாக பிளாக்பஸ்டர். வினோத் வேற ரகம் யா துணிவு.


பல வருடங்களுக்கு பிறகு அஜித்தை சூப்பர் கூலாக துணிவு படத்தில் பார்க்க முடிந்தது. இறுதியாக மங்காத்தா டா  என சொல்லும் நாள் அஜித் ரசிகர்களுக்கு வந்துவிட்டது. சில லாஜிக்குகளை தவிர்த்து விட்டு பார்த்தால் துணிவு பொங்கலுக்கான பக்கா கமர்ஷியல் படமாக அமைந்துள்ளது.


 

Advertisement

Advertisement

Advertisement