• Apr 16 2024

துணிவு படம் அசத்தப் போகின்றது.- பிக்பாஸ் பிரபலம் கொடுத்த புதிய அப்டேட்- அட இவரும் இப்படத்தில் நடித்திருக்கின்றாரா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் மாஸ் ஹுரோவாக வலம் வரும் அஜித் எச். வினோத் இயக்கத்தில் துணிவு என்னும் படத்தில் நடித்து வருகின்றார்.இப்படத்தினை போனிகபூர் தான் தயாரித்து வருகின்றார். மூன்றாவது முறையாக இக்கூட்டணி ஒன்று சேர்வதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகமாக உள்ளது.

இப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிப்பு வெளியாகியிருந்தது.நேற்று தான் துணிவு திரைப்படத்தின் திரையரங்க உரிமையை ரெட் ஜெயண்ட் நிறுவனம் வாங்கியிருப்பதாக அறிவித்து இருந்தனர்.


இந்நிலையில் துணிவு திரைப்படத்தில் நடித்துள்ள சின்னத்திரை மற்றும் பிக்பாஸ் பிரபலம் மமதி சாரி. இன்ஸ்டாகிராமில் இது குறித்து இயக்குநர் வினோத்துடன் எடுத்துகொண்ட புகைப்படத்துடன் பதிவிட்டு இருக்கிறார்.

அதில் இயக்குநர் வினோத் மற்றும் ஒளிப்பதிவாளர் நிரவ் ஷா உடன் பணியாற்றது குறித்தும் துணிவு திரைப்படம் அசத்த போகிறது என்றும் பதிவிட்டு இருக்கிறார். இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகமாக இருக்கின்றது.துணிவு படத்துடன் விஜய்யின் வாரிசு படமும் மோதவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement