• Mar 29 2024

துணிவு படத்தில் கண்டிப்பாக இதெல்லாமே இருக்கு- நடிகை மஞ்சுவாரியார் கொடுத்த சூப்பர் அப்டேட்- குஷியான ரசிகர்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

வினோத் இயக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, போனி கபூர் தயாரிக்க நடிகர் அஜித் நடித்து வரும் திரைப்படம் தான் துணிவு. இந்தப் படத்தின் படப்பிடிப்பானது ஐதராபாத்  சென்னை, விசாகப்பட்டினம், பேங்காக் நகரங்களில் நடைபெற்றது.

இந்த படத்தில் நடிகை மஞ்சு வாரியர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலி கதாபாத்திரத்தில் நடித்த ஜான் கொக்கன் இந்த  படத்திலும் நடித்துள்ளார். பிரபல இளம் தமிழ் சினிமா நடிகர் வீரா, சமுத்திரக்கனி, மகாநதி சங்கர், பிக்பாஸ் பிரபலங்களான பவனி & அமீர் ஆகியோரும் நடித்துள்ளனர்.


துணிவு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. மேலும் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமத்தை லைக்கா நிறுவனம் கைப்பற்றியுள்ளது.  துணிவு படத்தின் ஆடியோ உரிமத்தை ஜி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

 இந்நிலையில் பிரபல சேனலுக்கு பிரத்யேகமான பேட்டி ஒன்றை நடிகை மஞ்சு வாரியர் அளித்துள்ளார். துணிவு படத்தில் நடிகை மஞ்சு வாரியர் 'கண்மணி' எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த பேட்டியில், "துணிவு படத்தில் ரசிகர்கள் எந்த விஷயங்களை எல்லாம் எதிர்பார்க்கலாம்?" என கேள்வி கேட்கப்பட்டது.


இதற்கு பதில் அளித்த மஞ்சு வாரியர், " அஜித் சாரை எப்படி பார்க்க வேண்டும் என்று நீங்கள் ஆசைப்படுறீங்களோ அப்படி எதிர்பார்க்கலாம். துணிவு படத்தில் அஜித் சார் லுக் ரொம்ப நல்லா இருக்கு. என்னோட ஃபேவரைட் லுக் இது. ட்ரெய்லர்லயே பார்த்துருப்பீங்க ரசிகர்களை ரொம்ப கவரும் மேனரிசம் அஜித் சார்ட்ட இருக்கிறது. அஜித் சார் & ஹெச். வினோத் சார் ரசிகர்களுக்கு ஒரு நல்ல பொழுதுபோக்கு படமா இது அமையும் என நம்புறேன்". என‌ மஞ்சு வாரியர் பதில் அளித்துள்ளார்.


Advertisement

Advertisement

Advertisement