• Mar 28 2024

கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் துணிவு பட நடிகரின் மனைவி செய்த காரியம்- மோசமாக விளாசி வரும் நெட்டிசன்கள்-

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபல்யமானவர்களில் ஒருவர் தான் நடிகர் ஜான்கொகன். இவர் ஆர்யா நடிப்பில் வெளியான சார்பாட்டா பரம்பரை திரைப்படத்தில் வேம்புலி என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபல்யமானார்.

இப்படத்தைத் தொடர்ந்து சில திரைப்படங்களில் நடித்து வந்த இவர் தற்பொழுது அஜித் நடிப்பில் உருவாகியுள்ள துணிவு படத்தில் நடித்துள்ளார். இப்படம் இன்னும் சில தினங்களில் ரிலீஸுக்கு தயாராகி கொண்டிருக்கிறது.


ஜான் கொகன் மனைவி பிரபல நடிகை பூஜா ராமசந்திரன். இவர்கள் காதல் திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது பூஜா கர்ப்பமாக இருக்கிறார்.தற்போது கர்ப்பமாக இருக்கும் நிலையில் பூஜா ராமசந்திரன் ரிஸ்க் ஆன யோகா செய்யும் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.

தலைகீழாக நிற்கும் யோகாசனம் எல்லாம் இந்த நேரத்தில் செய்யாதீர்கள் என பலரும் அவருக்கு அட்வைஸ் செய்து வருகின்றனர். இந்த வீடியோ ரசிகர்களிடையே வைரலாகி வருவதைக் காணலாம். 


Advertisement

Advertisement

Advertisement