• Apr 20 2024

லவ் டுடே படத்தின் தெலுங்கு ட்ரெய்லர் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாம்- இது தான் காரணமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

நவம்பர் 4 ஆம் தேதி வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ள திரைப்படம் தான் லவ் டுடே. பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த இத்திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார் இவர்களுடன் ராதிகா சத்தியராஜ் யோகிபாபு ஆகியோரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர்.

மேலும் 5 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் இதுவரை 50 கோடி வசூல் செய்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்த நிலையில் தமிழில் மிகப் பெரிய வெற்றி பெற்ற லவ்டுடே படத்தை தெலுங்கிலும் டப் செய்து வெளியிட விஜய்யின் வாரிசு பட தயாரிப்பாளர் தில்ராஜு முயற்சி செய்து வருகிறார். 


இப்போது டப்பிங் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் கிட்டத்தட்ட 350 திரைகளில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இந்நிலையில் நேற்று இந்த படத்தின் தெலுங்கு பதிப்பு ட்ரெய்லர் வெளியாவதாக இருந்தது. ஆனால் தெலுங்கு திரையுலகின் மூத்த நடிகரும், நடிகர் மகேஷ் பாபுவின் தந்தையுமான கிருஷ்ணா இயற்கை எய்தியதை அடுத்து ட்ரெய்லர் ரிலீஸ் தள்ளிவைக்கப்படுவதாக தயாரிப்பு தரப்பு அறிவித்துள்ளது.


Advertisement

Advertisement

Advertisement