• Apr 17 2024

மண்ணை ஆளுறவனுக்கு தான் எல்லை நான் மண்ணை அள்ளுறவன்- பத்து தல படத்தின் டீசர் ரிலீஸ்

stella / 1 year ago

Advertisement

Listen News!

 இன்று தமிழ் சினிமாவில் முக்கிய நட்சத்திரமாக விளங்கும் சிம்பு நடிப்பில் இறுதியாக மாநாடு, வெந்து தணிந்தது காடு என்கிற இரண்டு படங்கள் வெளியாகி இருந்தது.இதில் மாநாடு திரைப்படம் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்று இருந்தது. 

பல வருடங்களாக நல்ல படம் கொடுக்காமல் இருந்து வந்த சிம்புவிற்கு இந்த படம் திருப்புமுனையாக அமைந்திருந்ததுஅதற்கு அடுத்தபடியாக கௌதம் வாசுதேவ் மேனனின் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்திருந்தார். இந்த படமும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.


 இந்த நிலையில் தற்போது பத்து தல என்கிற படத்தில் நடித்திருக்கிறார் சிம்பு. கன்னடத்தில் சிவராஜ் குமார் நடித்த மிகப்பெரிய வெற்றி பெற்ற மஃப்டி திரைப்படம் தமிழில் பத்து தல என்கிற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இந்த படத்தை இயக்குநர் கிருஷ்ணா இயக்கியிருக்கிறார்.

 சிம்புவுடன் இணைந்து கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சமீபத்தில் சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தில் இருந்து முதல் சிங்களான “நம்ம சத்தம்” என்கிற பாடலின் லிரிக்ஸ் வீடியோவை படக் குழுவினர் வெளியிட்டு இருந்தனர்.தற்போது படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. 









Advertisement

Advertisement

Advertisement