• Apr 24 2024

ஜப்பானிய மொழியில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தின் டீசர்! ரசிகர்கள் கொண்டாட்டம்

lathushan / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். தொடக்கத்தில் இவர் தனது தந்தை இயக்கிய திரைப்படங்களில் நடித்து வந்தார். மேலு இவர் ஏறத்தாழ 10 படங்களுக்குப் பின் தனது இடத்தை தக்கவைத்துக் கொண்டார். 


மேலும் இவர் தற்போது தமிழ்த் திரைப்படத் துறையில் முதன்மை நடிகர்களுள் ஒருவராகக் காணப்படுகிறார். விஜயின் ரசிகர்கள் இவரை "தளபதி" என்று அழைக்கிறார்கள். 


அதுமட்டுமல்லாமல் தனது தந்தை இயக்கிய இது எங்கள் நீதி என்ற திரைப்படம் வரை குழந்தை நடிகராகத் தொடர்ந்து நடித்தார்.அதன் பின் தந்தை இயக்கிய நாளைய தீர்ப்பு படத்தில் முதன்முறையாக முதன்மை நடிகராக நடித்தார். 


மேலும் இவர் நடித்த அனைத்து படங்களுமே மாபெரும் வெற்றி பெற்றது. மேலும் இவர் படம் வருது என்றாலே ரசிகர்கள் திருவிழா மாருதி கொண்டாடுவார்கள்.


இந்நிலையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் மாஸ்டர். விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான இத் திரைப்படம்  மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி பெற்றது.


இந்நிலையில் மாஸ்டர் திரைப்படம் இம்மாதம் ஜப்பான் நாட்டிலும் வெளியாக இருப்பதாக சொல்லப்பட்டது. மேலும் தற்போது ஜப்பான் Sub-title உடன் மாஸ்டர் திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இதோ அந்த டீசர்...


Advertisement

Advertisement

Advertisement