யூடியூப் பிரபலமான டிடிஎஃப் வாசன் தற்பொழுது மஞ்சள் வீரன் என்னும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகவுள்ளார்.இந்த படத்தின் ப்ரீ புரோடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டிடிஎஃப் வாசனின் பிறந்தநாளன்று வெளியாகி இணையத்தில் மிகப்பெரிய அளவில் பேசு பொருளாகி உள்ளது.
இந்நிலையில், டிடிஎஃப் வாசன் காஞ்சிபுரம் அடுத்த பாலுசெட்டி அருகே உள்ள சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில், டி.டி.எப். வாசன் தனது இரு சக்கர வாகனத்தில் கோயம்புத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது, தனது பைக்கில் வீலிங் செய்ய முயற்சித்தார். அப்போது, அதிவேகமாக பைக் சென்று கொண்டிருந்தபோது வீலிங் செய்ய முற்பட்டதால், பைக் அவரது கட்டுப்பாட்டை இழந்து நடுரோட்டில் குட்டிக்கரணம் அடித்து அருகில் இருந்த பள்ளத்தில் விழுந்தது.
இதில், தூக்கி வீசப்பட்ட டி.டி.எப். வாசன் சாலையோரம் இருந்த புதரில் விழுந்தார்.விபத்தை நேரில் பார்த்து பதறப்போன அக்கம்பக்கத்தினர் டி.டி.எப். வாசன் மீட்டு காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். விபத்தில் சிக்கிய டி.டி.எப். வாசன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். அவருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.
தற்போது அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. டி.டி.எப். வாசன் விபத்தில் சிக்கிய வீடியோ இணையத்தில் வைரலானதை அடுத்து, அவரது பேன்ஸ் அவரது ரசிகர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். சாலைகளில் அதிவேகமாக செல்லும் டிடிஎப் வாசனை பல முறை பலரும் கண்டித்தும் அவர் காதில் வாங்கிக் கொள்ளாமல் இப்படி ஒரு விபத்தில் சிக்கி உள்ளார்.
Listen News!