• Dec 04 2023

பாலிவுட் நடிகருடன் மீண்டும் வீடியோ சர்ச்சையில் சிக்கிய தமன்னா! வைரல் வீடியோ இதோ

Jo / 10 months ago

Advertisement

Listen News!

இந்திய பிரபல  நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தமன்னா. இவர் சமீபத்தில் பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவுடன் பார்ட்டியில் நெருக்கமாக இருக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் படுவைரலாகி தமன்னா சர்ச்சைக்குள்ளாகி இருந்தார்.

இதன்முலம் இருவரும் டேட்டிங் செய்து வருவது உறுதி செய்யப்பட்டது. ஆனால், அந்த வீடியோ வைரலான பிறகு கூட இருவரும் தங்களுடைய உறவு குறித்து எந்தஒரு விளக்கமும் தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



அந்த பார்ட்டிக்கு பிறகு இருவரும் ஒன்றாக விமான நிலையத்தில் வந்து இறங்கிய போது எடுக்கப்பட்ட வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலானது. 

அதன்பின் இருவரும் இந்த ஆண்டு திருமணம் நடக்க வாய்ப்புகள் அதிகம் என்றும் பேசப்பட்டது.

இந்நிலையில், தற்போது தமன்னா மற்றும் விஜய் வர்மா இருவரும் ஒரே இடத்திற்கு வந்த போது பாலிவுட் மீடியா எடுத்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும், 'They make a nice couple' என்பது போல் கமெண்ட் செய்து வருகிறார்கள்.இதனால் மீண்டும் தமன்னா சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறார்.

Advertisement

Advertisement

Advertisement