• Apr 20 2024

பிறந்தநாளில் திடீரென ஷாக்கடைந்த தமன்னா..என்ன தான் நடந்துச்சு...வெளியான வீடியோ..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழில் ’கேடி’ திரைப்படம் மூலம் அறிமுகமானவர் தான் தமன்னா. இப்படத்தினைத் தொடர்ந்து கடந்த 2007ம் ஆண்டு கல்லூரி என்னும் படத்தில் நடித்திருந்தார்.இப்படம் இவருக்கு நல்லதொரு அடையாளத்தையும் ஏற்படுத்திக் கொடுத்தது.

இதனை அடுத்து  தமிழ்,தெலுங்கு மற்றும் ஹிந்தியிலும் பல படங்களில் நடித்துள்ளார்.2016 ஆம் ஆண்டு தமன்னா நடித்த ‘தேவி’ திரைப்படம் மிகுந்த வரவேற்பை பெற்றது. 

பின்பு 2019 ஆம் ஆண்டு தேவி பாகம் இரண்டும் வெளியானது. ஆனால் தேவி 2 எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை.தமன்னா தமிழில் கடைசியாக நடித்த ’ஆக்‌ஷன்’ திரைப்படம் வெற்றி பெறவில்லை.

எனவே தற்போது தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.அந்த வகையில் விதவிதமாக உடையணிந்து ஃபேஷன் ஐகானாக திகழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் இன்று தமன்னா அவரது 33வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் சமூக வலைத்தளங்களில் வாழ்த்து கூறி இருக்கின்றனர்.

மேலும் அவரது டீம் திடீர் சர்ப்ரைஸ் கொடுத்து இருக்கிறது. அதை சற்றும் எதிர்பார்க்காத தமன்னா பார்த்து ஷாக் ஆகி இருக்கிறார்.அத்தோடு தமன்னாவின் மேக்கப் ஆர்ட்டிஸ்ட் அந்த வீடியோவை பகிர்ந்து இருக்கிறார்.  








Advertisement

Advertisement

Advertisement