• Apr 20 2024

தாலி கட்டியது விக்னேஷ் சிவன்; கணவன் சிம்புவா...என்னதான் நடக்குது..? பெரும் சர்ச்சையில் சிக்கிய விசயம்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

கடந்த 2015இல் இயக்குநர் விக்னேஷ் சிவன் நானும் ரவுடிதான் என்ற படத்தை இயக்கினார் .இதில் விஜய் சேதுபதியுடன் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்திருந்தார் , இதைத்தொடர்ந்து இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவிற்கும் இடையே நல்ல நட்பு மலர்ந்தது , இந்த அழகிய நட்பு காதலாக மாறி 7 வருடங்கள் கடந்து இன்று திருமணத்தில் முடிந்துள்ளது.

இவர்களின் திருமணம் 10.35 மணியளவில் 15 புரோகிதர்கள் மந்திரம் ஒலிக்க மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

அவர்களின் திருமண நிகழ்விற்கு இந்திய திரையுலகை சேர்ந்த பல்வேறு நட்சத்திரங்களும் கலந்து கொண்டுள்ளனர்.அதன்படி தற்போது ரஜினிகாந்த், ஷாருக் கான், மணிரத்னம்,சூர்யா உள்ளிட்ட உச்ச நட்சத்திரங்கள் இந்த திருமண நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும், தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், நடிகர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று உள்ளனர். திருமணத்தில் செல்போன்களுக்கு அனுமதியில்லை என பல்வேறு பலத்த கட்டுப்பாடுகளுடன் திருமணம் நடந்து முடிந்துள்ளது.

இந்நிலையில், விக்கிபீடியா பக்கத்தில் நயன்தாராவின் கணவர் என்கிற இடத்தில் சிலம்பரசன் டி.ஆர். என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் சிம்புவும், நயன்தாராவும் காதலித்தது உண்மைதான். அதன் பிறகு இருவரும் பிரிந்து தற்போது வரை நண்பர்களாக பழகி வருகிறார்கள்.

எனினும் தற்போது இந்த விக்கிபீடியோ பதிவு சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த ரசிகர்களுக்கு கோபமும், எரிச்சலும் வரவழைத்துள்ளது. ஏன்… இப்படி… இன்று நயன்தாராவின் திருமணம், மகிழ்ச்சியாக இருக்கும் இந்த சமயத்தில் யாரோ இப்படி ஒரு காரியம் செய்து மிகவும் தவறு என்று ரசிகர்கள் தங்களது கண்டனங்கள் தெரிவித்து வருகிறார்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement