• Sep 22 2023

தூங்கும் போது என் வாயிலிருந்து அதை எடுத்துடுவாங்க...! ஓபனாக சொன்ன நடிகை ரம்யா பாண்டியன்..!

Jo / 2 weeks ago

Advertisement

Listen News!

கடந்த 1990 ஆம் ஆண்டு பிறந்த நடிகை ரம்யா பாண்டியன் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான டம்மி டப்பாஸ் என்ற திரைப்படத்தில் சௌமியா என்ற கதாபாத்திரத்தில் நடித்த மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அதன் பிறகு ஜோக்கர், ஆண் தேவதை, ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும், நண்பகல் நேரத்து மயக்கம், இடும்பன் காரி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.


சினிமாவை விட சின்னத்திரையில் பிஸியாக உலா வந்து கொண்டிருக்கிறார் அம்மணி. சமீபத்தில் வெப் சீரிஸ்களை கூட நடித்திருந்தார். இது ஒரு பக்கம் இருக்க பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை ரம்யா பாண்டியன் இடம் நீங்கள் ஒரு 90ஸ் கிட்ஸ் என்பதால் இந்த கேள்வியை உங்களிடம் கேட்கிறோம்.


சிறு வயதில் நம்முடைய பல் ஆடினால் அந்த பல்லை பிடுங்கி படுக்கைக்கு கீழே வைத்துவிட்டு விளையாடிக் கொண்டிருப்போம். அந்த மாதிரி ஏதேனும் விளையாடி இருக்கிறீர்களா..? என்று கேள்வி எழுப்பப்பட்டது.


அதற்கு '' நடிகை ரம்யா பாண்டியன் அப்படி எதுவும் விளையாடுது கிடையாது என்னுடைய பல் ஆடிக் கொண்டிருந்தால் நான் தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது என் வாயிலிருந்து அதனை பிடுங்குவார்கள்

விழித்துக் கொண்டிருக்கும் பொழுது அந்த பல்லை பிடுங்கினால் நான் சத்தம் போடுவேன் என்பதால் தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது டக்கென்று பிடுங்கி விடுவார்கள் என கூறியிருக்கிறார் நடிகை ரம்யா பாண்டியன்.


ஆனால் அந்த பல்லை வைத்து மண்ணுக்குள் புதைத்து வைத்தால் காசு கிடைக்கும் என்று கூறுவதைக் கேட்டு மண்ணில் என்னுடைய பல்லை புதைத்து இருக்கிறேன்' என அந்த பேட்டியில் கூறியிருந்தார்.

Advertisement

Advertisement

Advertisement