• Apr 25 2024

நடிகர் விஜயகாந்த் இளம் வயதில் எப்படி இருக்கிறார் என்று பாருங்க - இதுவரை யாரும் பார்த்திடாத அரிதான புகைப்படம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 80களில் முன்னணி நடிகராகவும் தனது கம்பீரமான நடிப்பினால் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையும் சேர்த்த நடிகர் தான் விஜயகாந்த். இவருடைய நடிப்பில் வெளிவந்த ரமணா, ஆனஸ்ட் ராஜ், சத்ரியன், ஊமை விழிகள் உள்ளிட்ட பல படங்கள், இன்றும் ரசிகர்களால் ரசிக்கப்படும் திரைப்படங்களாக உள்ளன.

பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து வந்த இவர் மக்களுக்கு சேவையாற்றுவதற்காக அரசியலிலும் ஈடுபட்டு வந்தார். இருப்பினும் இடையில் திடீரென ஏற்பட்ட உடல் நலக்குறைவு காரணமாக அரசியலிலும் திரைவாழ்க்கையிலும் இருந்து விடுபட்டு ஓய்வெடுத்து வருகின்றார்.

இப்போது உடல் நலமடைந்த காரணத்தால் மீண்டும் நடிக்க வந்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இதுகுறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வமான தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

இந்நிலையில், நடிகர் விஜயகாந்தின் இளம் வயது புகைப்படம் வெளியாகியுள்ளது. பலரும் பார்த்திராத இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement