• Mar 27 2023

தனது மனைவி ஜோதிகாவுடன் பிரபல நடிகரை சந்தித்த சூர்யா?- ஒருவேளை அந்தப் படத்திற்காக இருக்குமோ?

stella / 2 months ago

Advertisement

Listen News!

நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா 42 படத்தில் நடித்து வருகிறார். வரலாற்று கதை என்பதால் மிகப்பெரிய பட்ஜெட் ஒதுக்கி படத்தை தயாரித்து வருகிறார்கள்.சூர்யா 42 என தற்காலிகமாக அழைக்கப்படும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு இந்த மாத தொடக்கத்தில் மீண்டும் தொடங்கியது. 

எண்ணூர் துறைமுகம் மற்றும் சென்னையில் உள்ள EVP ஃபிலிம்சிட்டியில் பிரமாண்டமான செட்டில் சில ஆக்‌ஷன் காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில், சமீபத்திய ஷெட்யூல் முடிவடைந்து அடுத்தகட்ட படப்பிடிப்பிற்கு தயாராகி வருகிறார்கள் சூர்யா 42 படக்குழுவினர்


மேலும் லோகேஷ் கனகராஜின் அடுத்த படமான தளபதி67 படத்தில் சூர்யா ரோலக்ஸ் ஆக நிச்சயம் வருவார் என ரசிகர்கள் அதிகம் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள்.இந்நிலையில் தற்போது சூர்யா மற்றும் ஜோதிகாவை மலையாள நடிகர் பிரித்விராஜ் சந்தித்து இருக்கும் போட்டோவை வெளியிட்டு இருக்கிறார்.


இந்த போட்டோ வைரல் ஆகி வரும் நிலையில், இந்த சந்திப்பு தளபதி 67 செட்டில் நடந்ததா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.இருப்பினும் சரியான அறிவிப்பு வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.  


Advertisement

Advertisement

Advertisement