• Sep 22 2023

கோவிலில் மாற்றி மாற்றி தூக்கி விளையாடும் சூர்யா மற்றும் வெண்ணிலா- Kaatrukkenna Veli Promo

stella / 1 week ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கென்று எப்போதுமே ஒரு ரசிகர் கூட்டம் உண்டு. அவ்வாறு பல்லாயிரக்கணக்கான ரசிகர்களை கவர்ந்த ஒரு ஹிட் சீரியல் தான் 'காற்றுக்கென்ன வேலி'. இந்த சீரியல் ஆனது முழுக்க முழுக்க கல்லூரியை மையப்படுத்தி உருவாக்கப்பட்டு வருகிறது.

இதில் வெண்ணிலாவும் சூர்யாவும் பல தடைகளைத் தாண்டி திருமண பந்தத்தில் இணைந்து கொண்டுள்ளனர். இருப்பினும் வெண்ணிலா வீட்டில் இவர்களது திருமணத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. அத்தோடு சூர்யாவையும் அவரது பெற்றோரையும் தனது வீட்டிலிருந்து விரட்டி விட்டார் அவரது பெரியம்மா.

இப்படியான நிலையில் ஒரு ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் வெண்ணிலாவும் சூர்யாவும் கோயிலுக்குப் போகின்றனர். இருவரும் மாலைமாற்றி சாமி கும்பிட்டு விடுகின்றனர்.

பின்னர் அங்கே மனைவிமார்கள் கணவன்மார் நல்லா இருக்க வேண்டும் என நினைத்து அவரைத் துாக்குகின்றனர்.அதனைப் பார்த்து சூர்யாவும் வெண்ணிலாவும் மாறி மாறித் துாக்குகின்றனர். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைகின்றது.



Advertisement

Advertisement

Advertisement