தமிழ் சினிமாவின் வாரிசு நடிகராக அறிமுகமாகி தமக்கென்று ஓர் இடத்தைப் பிடித்த முன்னணி நடிகர்களில் முக்கியமானவர் தான் நடிகர் சூர்யா. இவர் நடிப்பில் வெளியாகியிருந்த பல திரைப்படங்கள் ரசிகர்களிடையே அதிக வரவேற்பைப் பெற்றிருக்கின்றன.
சூரரைப்போற்று, ஜெய் பீம் ஆகிய படங்களின் வெற்றியைத்தொடர்ந்து நடிகர் சூர்யா நடித்து வரும் படம் எதற்கும் துணிந்தவன். பாண்டிராஜ் இயக்கும் இப்படத்தில் பிரியங்கா மோகன் நாயகியாக நடிக்க இமான் இசையமைக்கிறார். அத்தோடு வினய், சத்யராஜ், சூரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
படப்பிடிப்பெல்லாம் முடித்து வெளியீட்டிற்கு தயாராகியுள்ள இத்திரைப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி வைரலாகியது. பெப்ரவரி மாதம் 4 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள எதற்கும் துணிந்தவன் கொரோனா பரவல் காரணமாக தள்ளிப்போக வாய்ப்புள்ளது.

இவர் பிரபல நடிகை ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு நடிப்பதை நிறுத்திக் கொண்ட ஜோதிகா பல வருட இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார்.
சூர்யா, ஜோதிகா ஜோடிக்கு உலகம் முழுவதும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. தற்போது இவரது ரசிகர் ஒருவர் இருவரையும் சின்னஞ்சிறுசுகளாக மாற்றி வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்:
- மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுடன், நடிகை ஸ்ரீதேவி- வைரலாகி வரும் புகைப்படம்
- பாக்கியாவை டிவோர்ஸ் செய்யும்மாறு கோபியை வற்புறுத்தும் ராதிகா-விறுவிறுப்பின் உச்சத்தில் பாக்கியலட்சுமி சீரியல்
- புஷ்பா படத்தின் ‘சாமி பாடலுக்கு குத்தாட்டம் போட்ட நடிகை ஷிவாங்கி- எப்படி ஆடுகிறார் என்று பாருங்க
- அன்பே சிவம் சீரியலில் இருந்து கதாநாயகி விலகுகின்றாராம்- கடும் சோகத்தில் ரசிகர்கள்
- ரகசியத் திருமணம் செய்த நடிகர் சாந்தனுவின் திரைப்பட நடிகை-அதிர்ச்சியில் ரசிகர்கள்
- நாட்டியக்கலையில் அசத்தும் நடிகை சாய் பல்லவி- எவ்வளவு கியூட்டாக ஆடுகிறார் என்று பாருங்க
- பிக் பாஸ் Ultimate நிகழ்ச்சியில் பங்குபற்றப் போகும் முதல் போட்டியாளர் இவர் தான்- அட்டகாசமான புரோமோ
- பாரதி கண்ணம்மா ரோஷினியைப் பாருங்க ரொம்ப கியூட்டாக இருக்கின்றாரே -வைரலாகும் வீடியோ
- டிக்டாக் பிரபலம் ஜி.பி முத்துவைக் காண ஒன்று கூடிய ரசிகர் பட்டாளம்- வைரலாகும் வீடியோ
- பாவனிக்கு முத்தம் நான் வலுக்கட்டாயமாகக் கொடுக்கவில்லை- அமீரின் காராசாரமான பேச்சு
- சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் பிக்பாஸ் சீசன் 5 பிரபலமும் நடித்துள்ளாராம் – அட இந்த நடிகரா?
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்