முதலாவது போட்டியினை முடித்து தாம் தங்க இருக்கும் தீவுக்குச் சென்ற சர்வைவர் போட்டியாளர்கள்

262

தமிழில் பிரபல்மயமான தொலைக்காட்சியில் ஒன்றான ஷீ தமிழில் 12ம் திகதி “சர்வைவர்” என்னும் நிகழ்ச்சி புதிதாக ஆரம்பிக்கப்பட்டது. அந்த நிகழ்ச்சியினை நடிகர் அர்ஜுன் தொகுத்து வழங்கி வருவதோடு இதில் 16 போட்டியாளர்கள் பங்குபற்றி வருகின்றனர் என்பதும் தெரிந்ததே. அத்தோடு ஆபிரிக்க தீவில் நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சியில் காடர்கள் என்ற குழுவில் விக்ராந் தலலைமையில் 8 பேரும் லட்சுமி ப்ரியா தலமையில் வேடர்கள் என்ற குழுவில் 8 பேரும் பிரிக்கப்பட்டனர்.

மேலும் அந்த வகையில் இதன் முதல்ப்போட்டியானது இன்று ஒளிபரப்பப்பட்டது. இதில் கடலின் நடுவே ஒரு கப்பல் இருக்கும் அதில் இரண்டு குழுவினருக்கும் தேவையான உணவுகள் இருக்கும் அதனை எடுத்து வரவேண்டும். இதனால் குழுவினர் அனைவரும் கடலுக்குள் இறங்குகின்றனர். அதில் வேடர்கள் குழுவில் ஜஸ்வர்யா என்பவர் முதலாவதாக நீந்திச் சென்று கப்பலுக்குள் ஏறினார்.

பின் காடர்களில் சரண் கப்பலில் ஏறி தமக்குத் தேவையான பொருட்களை எடுத்துக் கொண்டனர். பின்பு கடலைவிட்டு கரைக்கு வந்தவுடன் நெருப்பு உருவாக்கும் கருவி மற்று மாப் என்பன இரு வட்டம் போட்டு மண்ணுக்குள் தாட்டு வைத்ததை இரு குழுவும் தனித்தனியாக தேடி இரண்டையும் எடுத்துக் கொண்டனர். பின்பு இருகுழுவும் தாம் இருக்கப்போகும் தீவுக்குச் சென்றனர்.

இரவு வேளை என்பதால் தாம் கொண்டு வந்த உணவுகளை உண்டு அன்றைய பொழுதைக் கழித்தனர். பின்கு காலையில் வேடர்கள் தமது தீவில் தேங்காய் பிடுங்கி உண்டனர். காடர்கள் சமைத்து சாப்பிட்டனர். பின்பு தமக்கு தங்குவதறகுத் தேவையான குடிசையமைக்கும் பணியில் இரு குழுவும் ஈடுபட்டு வந்தனர்.இதில் வேடுவர் குழுவில் உள்ளவர்கள் சிலருடன் வாக்குவாதமும் இடம் பெற்றது.

இதனைத் தொடர்ந்து நாளை ஒவ்வொரு குழுவுக்கும் தலைவர் தேர்வு செய்யும் போட்டி இடம் பெறவுள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.