சர்வைவர் நிகழ்ச்சியில் தொலைபேசி பயன்படுத்த முடியாது ஆனால் விக்ராந்த் மட்டும் எப்படி ட்வீட் செய்கின்றார்?

364

தமிழ் திரையுலகிற்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகர் விக்ராந்த் . இவர் தமிழில் பல படங்களில் ஹீரோவாக நடித்திருந்தாலும் முன்னணி நடிகர் என்கிற அந்தஸ்து இவருக்குக் கிடைக்கவில்லை எனலாம். மேலும் இவர் இருந்தாலும் தொடர்ந்தும் நம்பிக்கையுடன் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அவர் ஆக்ஷன் கிங் அர்ஜுன் தொகுத்து வழங்கி வரும் சர்வைவர் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டிருக்கிறார். எப்பொழுதும் ஃபிட்டாக இருக்கும் விக்ராந்த் சந்தோஷ் இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெற திரையுலகினரும், ரசிகர்களும் வாழ்த்திக் கொண்டிருக்கிறார்கள்.

மேலும் சர்வைவர் நிகழ்ச்சிக்காக ஒரு தீவில் இருக்கும் போட்டியாளர்கள் செல்போன் பயன்படுத்த அனுமதி கிடையாது. இந்நிலையில் சர்வைவர் நிகழ்ச்சியை பார்க்குமாறு ட்வீட் செய்திருக்கிறார் விக்ராந்த். மேலும் நிகழ்ச்சி குறித்து அப்டேட்டும் கொடுத்திருக்கிறார்.

அத்தோடு அந்த ட்வீட்டை பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்கள். இதில் சமூக வலைதளவாசிகள் கூறியிருப்பதாவது, ஷோ போய்க் கொண்டிருக்கும்போது இவர் எப்படி ட்வீட் செய்கிறார்?. செல்போன் பயன்படுத்த தான் அனுமதி இல்லையே. அட்மினாக இருக்குமோ. இல்லை என்றால் மனைவி ட்வீட் செய்கிறார் போன்று என்றும் குறிப்பிடுகின்றனர்.

எது எப்படியோ, வெற்றி பெற வாழ்த்துக்கள் ப்ரோ. வாழ்க்கையில் நிறைய கஷ்டங்களை பார்த்துவிட்டீர்கள். இந்த சர்வைவர் உங்களுக்கு கை கொடுக்கட்டும் என ரசிகர்கள் தெரிவித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.